Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 TN Assembly Elections: ஓபிஎஸ், டிடிவியுடன் பேச்சுக்கே இடமில்லை.. நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம்..!

AIADMK-BJP Alliance: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணி பாஜக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும், நத்தம் விஸ்வநாதன் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி சாத்தியம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

2026 TN Assembly Elections: ஓபிஎஸ், டிடிவியுடன் பேச்சுக்கே இடமில்லை.. நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம்..!
டிடிவி தினகரனுடன் ஓபிஸ் - நத்தம் விஸ்வநாதன்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 15 May 2025 21:21 PM

கொடைக்கானல், மே 15: 2026 சட்டமன்ற தேர்தலை (Tamil Nadu Assembly Election 2025) எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அதேநேரத்தில் ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) அணியும், டிடிவி தலைமையிலான அமமுக கட்சியும் உள்ளது. இதையடுத்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் ஓபிஎஸ் அணியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் வெளியேறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அதாவது 2025 மே 15ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கட்சியில் தொடர்ந்து நீடிப்போம் என்று தெரிவித்தார். இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் (Natham R. Viswanathan) பாஜக கூட்டணியில் இருந்தாலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உடன் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம்:

கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது, “பாஜக கூட்டணியில் இருந்தாலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உடன் பேச்சுக்கே இடமில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் அதில் வந்து இணையும். அந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி கூட்டணியாக அமையும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி இணையுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், “மற்ற கட்சிகளின் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். பொதுச்செயலாளர் மட்டுமே கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி எந்தெந்த கட்சிகளை அழைப்பார், எந்தெந்த கட்சிகளை இணைப்பார் என்பது இனிமேல் தான் தெரியும்” என்றார்.

பாஜக – அதிமுக கூட்டணி:

2024 மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இரண்டும் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை. மேலும், பிரதான எதிர்க்கட்சியாக பார்க்கப்படும் அதிமுக பல நாடாளுமன்ற தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேநேரத்தில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்டு 11.24 வாக்கு சதவீதத்தை பெற்றது. அதிமுக அந்த தேர்தலில் 20.46 வாக்கு சதவீதத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தன. பாஜகவுடன் கூட்டணி வைத்தபிறகு இந்த கூட்டணி சாத்தியமில்லை என்று உறுதியானது.

எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?
எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?...
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!...
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!...
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி...
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?...
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு...
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?...
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!...
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!...