தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palaniswami About Delimitation: இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 17ஆம் தேதி நேற்று மாலை இந்த மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் - எடப்பாடி பழனிசாமி..

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Apr 2026 17:49 PM

 IST

சென்னை, ஏப்ரல் 18, 2026: தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கூடுதல் எம்பிக்கள் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால் தமிழகத்தின் எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கியமாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருந்தது.

இந்த தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால், வட இந்தியாவுக்கான அதிகாரம் அதிகரிக்கும்; தமிழகத்தின் அதிகாரம் குறையும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பிரச்சாரம் ரத்து – திமுக நெருக்கடி தருகிறது – விஜய் பரபரப்பு அறிக்கை

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி:

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 17ஆம் தேதி நேற்று மாலை இந்த மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்திருந்தார். அதே சமயத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கியும் இதை கொண்டாடினார்.

தமிழ்நாட்டில் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும்:

இந்த சூழலில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த மசோதாவை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கூடுதல் எம்பிக்கள் குறையக்கூடும் என சுட்டிக்காட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிக்கக் கூடிய, மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை நாம் இழந்ததோடு மட்டுமல்லாமல், 50% கூடுதல் இடங்களை பெறும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் மு.க. ஸ்டாலின் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது தொகுதி மறுவரையறை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும். மேலும் நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழப்போம்.

பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி:

மேலும், 1998ஆம் ஆண்டு ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் தலைமையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தார். அப்போது இந்திய கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் பார்த்துக் கொண்டன. இம்முறை மசோதாவை எதிர்த்து உள்ளீர்கள். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கே மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை செய்துள்ளீர்கள்.

நீங்கள் எதை கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய சேதத்தையா, அல்லது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாபெரும் வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா?” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்