கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

Madurai Youth Murder : மதுரையில் 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் கால் மூலம் ஏற்பட்ட பிரச்னையால், இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின், நண்பர் காவல்துறை அதிகாரி போல் பேசியது தொடர்பாக, இருவருக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில் இளைஞர் கொலை

Updated On: 

11 Jul 2025 21:32 PM

மதுரை, ஜூலை 11 : மதுரையில் இளைஞர் கொலை (Madurai Youth Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களிடம் இருந்து வந்த பிராங்க் கால் மூலம் ஏற்பட்ட பகையால், 18 வயது இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் கல்மேடு அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் 18 வயதான அரசு. பள்ளிப்படிப்பை முடித்த அவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி. இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரசு வீட்டில் இருந்தபோது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் காவல்துறை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசுவை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. அரசுவை மிரட்டியதோடு, ஒழுங்காக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

கொலையில் முடிந்த பிராங்க் கால்

அதன்பின், அரசுவின் தாயாரிடமும் காவல்துறை அதிகாரி என ஒருவர் பேசி இருக்கிறார். அரசுவை ஒழுங்காக இருக்க சொல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் சிறைக்கு தான் செல்வார் எனவும் மிரட்டி இருக்கின்றனர். அந்த நபர் பேசும்போது வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால், போலீஸ் பேசியதாக அரசு மற்றும் அவரது தாய் நம்பியுள்ளதாக தெரிகிறது. ஆனால், சில நாட்ககளுக்கு பிறகு, போலீஸ் அதிகாரி போல் பேசியது அரசுவின் நண்பர் அழகுபாண்டி என்பது தெரியவந்தது. இதுபற்றி அழகுபாண்டியிடம் கேட்க, அவரும் தான் பிராங்க் கால் செய்ததாக ஒப்புக் கொண்டார்.

இதனால், அரசு, அவர் மீது கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், இரு குடும்பத்தினரிடையே பிரச்னையும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், சில நாட்களாகவே அரசுவும், அழகுபாண்டியும் பேசிக் கொள்ளலாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.  இரண்டு நாட்களுக்கு அழகுப்பாண்டி அண்ணன் செல்லபாண்டியை வீட்டிற்கு முன்பு அரசு பார்த்துள்ளார்.

Also Read : மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

அப்போது, பிராங்க் கால் தொடர்பாக இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதோடு, செல்லபாண்டியை அரசு மிரட்டி இருக்கிறார். இதனால், தனது தம்பி அழகுபாண்டியை, அரசு தாக்கி விடுவாரோ என செல்லபாண்டி நினைத்திருக்கிறார். மேலும், அதற்கு முன்பு அரசுவை தாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், 2025 ஜூலை 10ஆம் தேதியான நேற்று நள்ளிரவு அரசுவின் வீட்டிற்கு செல்லப்பாண்டி கத்தியுடன் சென்றிருக்கிறார். அங்கு வீட்டின் கதவை தட்டி இருக்கிறார். அப்போது, அரசுவின் தாய் கதவை திறந்து இருக்கிறார். அப்போது, உள்ளே நுழைந்த செல்லபாண்டி, அரசுவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

Also Read : போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. காரை வழிமறித்து நகை கொள்ளை. . கோவையில் பயங்கரம்!

இதனை தடுக்க வந்த அவரது தாய் மற்றும் தங்கையும் செல்லபாண்டி தாக்க முயன்றார். இதனை அடுத்து, செல்லபாண்டி தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், செல்லபாண்டியை தேடி வருவதாக தெரிகிறது.