பெண்கள் புகைப்படங்களுடன் பேக் ஐடி மூலம் பணம் பறித்து மோசடி.. வசமாக சிக்கிய இளம்பெண்..

A young woman was caught red-handed: விசாரணையில், ஒரு பெண் ஃபேஸ்புக்கில் போலி ஐடி உருவாக்கி, ஆபாசப் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்

பெண்கள் புகைப்படங்களுடன் பேக் ஐடி மூலம் பணம் பறித்து மோசடி.. வசமாக சிக்கிய இளம்பெண்..

பேக் ஐடி மூலம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்

Updated On: 

24 Jan 2026 12:28 PM

 IST

நாகர்கோவில், ஜனவரி 24: சமூக வலைளதங்களில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீசார் வசம் சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இக்காலத்தில், ஆன்லைன் மோசடிகளும் அதனைத் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, உல்லாசம் என்ற பெயரில் ஆசை வார்த்தைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகின்றன. இதுபோன்ற மோசடிகளில், போலி சமூக வலைதள கணக்குகள் உருவாக்கப்பட்டு, பெண்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அப்படி நடந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. பிரியாணியில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. திடுக் சம்பவம்!!

வீடியோ கால் மூலம் பெண்ணுடன் பேசலாம்:

நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனில், பேஸ்புக் சமூக ஊடகத் தளத்தில் கணக்கு வைத்துள்ளார். அதில் ஒரு பெண் பெயரில் ஒரு ஐடி இருந்துள்ளது. அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பெண் பேசும் வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில், பணம் செலுத்தி ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டால், ஆபாசமாகப் பேசவும் மற்றும் அரட்டை அடிக்கவும் பெண்கள் வீடியோ கால் மூலம் திரையில் தோன்றுவார்கள் என்றும், அவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார். மேலும், அந்தப் பக்கத்தில் அழகான இளம் பெண்களின் பல கவர்ச்சியான படங்களும் இடம்பெற்றிருந்தன.

ரூ.1,500 பணம் செலுத்தி ஏமாற்றம்:

இதை நம்பிய அந்தத் தனியார் நிறுவன ஊழியர், ஆன்லைன் மூலம் ரூ.1,500 வரை பணம் செலுத்திவிட்டு, ஆபாச வீடியோ அழைப்புக்காகக் குறிப்பிடப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டார். ஆனால், அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பின்னரே அந்தத் தனியார் நிறுவன ஊழியர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனால், மன உளைச்சல் அடைந்த அந்த நபர், இளம் பெண்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று பொய் வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்கலிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

விசாரணையில் சிக்கிய பெண்:

விசாரணையில், ஒரு பெண் ஃபேஸ்புக்கில் போலி ஐடி உருவாக்கி, ஆபாசப் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ​​போலி ஃபேஸ்புக் ஐடி மூலம் பணம் பறித்து மக்களை ஏமாற்றியவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த நளீலா பேகம் (27) என்பதும், அவர் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் நளீலா பேகத்தைக் கைது செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..