தமிழகம் – மேற்கு வங்கம் இடையே 3 அமிர்த் பாரத் ரயில் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்.. எந்த வழித்தடங்களில்?

Amrit Bharat Train Service: தமிழகத்தில் முதல் அமிர்த் பாரத் ரயில் ஈரோடு – பீஹார் மாநிலம் ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அமிர்த் பாரத் ரயிலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் பல்வேறு இடங்களுக்கு எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மூன்று புதிய அமிர்த் பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே 3 அமிர்த் பாரத் ரயில் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்.. எந்த வழித்தடங்களில்?

கோப்பு புகைப்படம்

Published: 

17 Jan 2026 10:08 AM

 IST

ஜனவரி 17, 2026: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதேபோல், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், ஏசி வசதி இல்லாத அமிர்த் பாரத் ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தமிழகத்தில் முதல் அமிர்த் பாரத் ரயில் ஈரோடு – பீஹார் மாநிலம் ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அமிர்த் பாரத் ரயிலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் பல்வேறு இடங்களுக்கு எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மூன்று புதிய அமிர்த் பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில்களும் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – மேற்கு வங்கத்தை இணைக்கு அமிர்த் பாரத ரயில்:

இந்த ரயில் சேவைகள் ஜனவரி 17, 2026 தேதியான இன்றிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதன்படி, மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி – திருச்சி, தாம்பரம் – சந்திரகாசி, நாகர்கோவில் – ஜல்பைகுரி என மூன்று ரயில்கள் வாராந்திர ரயில்களாக இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன்? அரசியல் பரபரப்பை கிளப்பிய பேனர்..

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவில் – ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் அமிர்த் பாரத் ரயில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு ரங்கபாணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேவையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் எட்டு சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், 11 செகண்ட் கிளாஸ் பெட்டிகள், ஒரு பேன்டரி பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு செகண்ட் கிளாஸ் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் ரங்கபாணி, கிஷாங்கஞ்ச், பர்சோலை, மால்டா, கரக்பூர், ஜாஜ்பூர், கட்டக், புவனேஸ்வர், சோம்பேட்டா, ஸ்ரீகாக்குளம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை வந்தடையும்.

திருச்சிராப்பள்ளி – ஜல்பைகுரி:

அதேபோல், திருச்சிராப்பள்ளி – ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் அமிர்த் பாரத் விரைவு ரயில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சேவையை தொடங்குகிறது. இந்த ரயில் ஜல்பைகுரி, கிஷாங்கஞ்ச், பர்சோய், மால்டா டவுன், போல், ஜாஜ்பூர், கட்டக், புவனேஸ்வர், இச்சாபுரம், சோமபெட்டா, ஸ்ரீகாக்குளம், விசாகப்பட்டினம், விஜயவாடா, சூலூர் பேட்டை, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிராப்பள்ளியை சென்றடையும்.

மேலும் படிக்க: யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..

தாம்பரம் – சந்திரகாசி:

மேலும், தாம்பரம் – சந்திரகாசி இடையே இயக்கப்படும் அமிர்த் பாரத் ரயில், சந்திரகாசி, கரக்பூர், ஜாஜ்பூர், கட்டக், புவனேஸ்வர், பிரம்மபூர், ஸ்ரீகாக்குளம், ஸ்மால் கோர்ட், விஜயவாடா, தெனாலி, ஜுராலா, நெல்லூர், சூலூர் பேட்டை, சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!