இரவில் அதிக நேரம் படிக்காதே என கூறிய பெற்றோர்.. மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு!
12th Standard Student Jumped From 9th Floor | சென்னை, வானகரம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன், இரவில் நீண்ட நேரம் படிக்க வேண்டாம், தூங்க செல் என பெற்றோர் கூறியதால் மனமுடைந்த 9வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 20 : சென்னை (Chennai) வானகரம் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான எபிபாத். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு 17 வயதில் சஷ்வத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராஜேஸ்வரி ஆசிரியையாக பணியாற்றும் அதே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 18, 2025 அன்று மாணவர் தனது வீட்டில் இரவு நேரத்தில் படித்துக்கொண்டு இருந்துள்ளார். அதனை கண்ட அவரது பெற்றோர் படித்தது போதும் தூங்க செல் என கூறியுள்ளனர்.
9வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவர்
பெற்றோர்கள் தூங்க சொல்லவிட்டு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் அந்த மாணவர் 9வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டதாக குடியிருப்பில் இருப்பவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிய தம்பதி தங்களது மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : திருச்சியில் கொடூர சம்பவம்…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணை இரவில் அதிக நேரம் படிக்க வேண்டாம், தூங்க செல் என பெற்றோர்கள் கூறியதால் அந்த மாணவர் மனமுடைந்த 9வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…4 தனிப்படைகள் அமைப்பு…போலீசார் விசாரணை
உண்மையில் மாணவனின் மரணத்திற்கு இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)