100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளை.. திருவள்ளூரில் பரபரப்பு!

Gold and Silver Theft in Thiruvalllur | திருவள்ளூரில் உள்ள ஒரு பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டில் இருந்து சுமார் 100 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணம், புடவைகள் என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளை.. திருவள்ளூரில் பரபரப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Nov 2025 10:30 AM

 IST

திருவள்ளூர், நவம்பர் 03 : திருவள்ளூரில் (Thiruvallur) ஒரு வீட்டில் இருந்து சுமார் 100 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், புடவைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த மொத்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கர்லப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் ஊருக்கு வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் நள்ளிரவில் மர்ம கும்பல் வெறிச்செயல்.. சாலையில் சென்ற 10 பேருக்கு அரிவாள் வெட்டு!

அதனை கண்டு பழனி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக கடும் அச்சத்திற்கு உள்ளான அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார்

இந்த கொள்ளை சம்பவம் பழனியின் தலையில் இடியை இறக்கிய நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பழனியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காணாமல் போன இளம் பெண் – காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – திருச்சி அருகே பரபரப்பு

குற்றவாளிகளை வலைவீசி தேடிவரும் போலீஸ்

கொள்ளையர்கள் பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு வீட்டிலே அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த தடையங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..
விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!
கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. முழு ரிப்போர்ட் இதோ..
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!