Kohli and Rohit’s Farewell Tour: கோலி, ரோஹித்துக்கு ஸ்பெஷல் ஃபேர்வெல்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா சூப்பர் பிளான்!

Virat Kohli and Rohit Sharma Farewell Tour: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட், அவர்களுக்கு சிறப்பு விடைபெறுதல் தொடரைத் திட்டமிட்டுள்ளது. இந்திய அணி அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பயணம், கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடும் வாய்ப்பாக அமையலாம் என்பதால், சிறப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.

Kohli and Rohits Farewell Tour: கோலி, ரோஹித்துக்கு ஸ்பெஷல் ஃபேர்வெல்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா சூப்பர் பிளான்!

விராட் கோலி - ரோஹித் சர்மா

Published: 

08 Jun 2025 18:00 PM

 IST

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) டி20 மற்றும் டெஸ்ட் என 2 வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றபிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 வடிவத்தில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன்பிறகு, 2025 மே 12ம் தேதி விராட் கோலியும், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றனர். இப்போது, இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். இந்தநிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஒரு சிறப்பு மரியாதை அளிக்க திட்டமிட்டுள்ளது.

சிறப்பு மரியாதை:

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு, சிறப்பு விடைபெறுதல் எதுவும் அளிக்கப்படவில்லை. இப்போது, இந்த 2 வீரர்களும் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். இதுப்போன்ற சூழ்நிலையில், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் அக்டோபரில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம். கிடைத்த தகவலின்படி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த சுற்றுப்பயணத்தை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விடைபெறும் தொடரை தயாரிக்கவுள்ளது. ஏனெனில், இது இவர்களுக்கு கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா:

2025ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடும்போது, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மறக்கமுடியாத பிரியாவிடை வழங்கப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க் தெரிவித்துள்ளார். அதில், “இது இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளால் சிறப்பிக்கப்பட்ட ஒரு பெரிய கிரிக்கெட் கோடைக்காலம். கூடுதலாக ஆஷஸ் தொடர் உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட், ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்கள் மற்றும் பிரதேசத்திலும் சர்வதேச போட்டிகளை நடத்த இருக்கிறது. இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய உந்துதலை தரும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம். ஒருவேளை அது நடக்கமாலும் போகலாம். ஆனால் அப்படி நடந்தால், கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஒரு சிறந்த பிரியாவிடை அளிக்க நாங்கள் விரும்புகிறோம். இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு கோலி மற்றும் ரோஹித் சர்மா செய்த நம்பமுடியாத பங்களிப்பின் பிரதிபலிப்பாகும்.” என்று தெரிவித்தார்.