India Vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை எச்சரிக்கை.. தடைப்பட்டால் ரிசர்வ் நாள் உண்டா?

India Vs Pakistan Reserve Day: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய போட்டி இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

India Vs Pakistan: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை எச்சரிக்கை.. தடைப்பட்டால் ரிசர்வ் நாள் உண்டா?

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

14 Feb 2026 16:35 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) அணிகளுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். இப்படியான சூழ்நிலையில், போட்டியின்போது வானிலை முன்னறிவிப்பின்படி, 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் மழை பெய்ய 93 சதவீத வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!

ரிசர்வ் டே:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி மழை காரணமாக தடைப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரிசர்வ் டே இருக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் போட்டியில் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர் 8 போட்டிகளுக்கு ரிசர்வ் டே இல்லை. மழை காரணமாக ஒரு போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 போட்டியின் முடிவை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீச வேண்டும். திட்டமிடப்பட்ட நாளில் போட்டியை முடிக்க ஓவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, ரசிகர்கள் இந்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்தாலும், மழை அச்சுறுத்தல் மற்றும் ரிசர்வ் டே இல்லாதது போட்டியின் முடிவைப் பாதிக்கலாம். முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.1 லட்சம் வரை விலை உயர்ந்த விமான டிக்கெட்டுகள்:

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டெல்லி மற்றும் மும்பையிலிருந்து கொழும்புக்கு விமான டிக்கெட்டுகள் ரூ.1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.50,000 வரை வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, இலங்கை காவல்துறையினர் தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.

ALSO READ: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?

இந்தியா – பாகிஸ்தான் இதுவரை நேருக்கு நேர்:

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய போட்டி இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். ஏனெனில், டி20 உலகக் கோப்பையில் தற்போது வரை இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. 2007ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு, இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 7 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.

Related Stories
Abhishek Sharma Health Update: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
India vs Pakistan: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?
India vs Pakistan 2026: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் கண்ணாடி பாட்டில்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்