Abhishek Sharma Health Update: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

India vs Pakistan: சமீபத்தில் 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா வயிற்று வலி காரணமாக விளையாடவில்லை. இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்றும், அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்றும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

Abhishek Sharma Health Update: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

அபிஷேக் சர்மா - சூர்யகுமார் யாதவ்

Updated On: 

14 Feb 2026 18:39 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி இலங்கையின் கொழும்பில் நடைபெறும். ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், இந்திய ரசிகர்கள் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணியின் கடைசி போட்டி நமீபியாவுக்கு எதிராக நடந்தது. வயிற்று வலி காரணமாக அந்த போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடும் பதினொன்றில் இடம்பெறவில்லை. இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்றும், அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்றும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய அணி நேற்று அதாவது 2026 பிப்ரவரி 13ம் தேதி இலங்கைக்கு வந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக அபிஷேக் சர்மா இந்திய அணியுடன் இலங்கைக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?

போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா விளையாடுவார். அதன்படி, அபிஷேக் சர்மா மீண்டும் விளையாடும் இந்திய லெவன் அணியில் இடம் பெறுவார். 24 மணிநேரம் காத்திருங்கள். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம். பின்னர், அதை பற்றி முடிவு செய்வோம். நன்றாக தூங்குங்கள், நன்றாக சாப்பிடுங்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பிவோம். அது நடந்தால் மிகவும் மகிழ்ச்சி, நாங்கள் டாஸை இழந்து ஆட்டத்தில் வெற்றி பெறும் வரை, நாங்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. பனி ஒரு பெரிய காரணியாக இருக்கும். எனவே, முடிந்தவரை அனைத்தையும் செய்து, உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க முயற்சிப்போம்.” என்றார்.

அபிஷேக் சர்மாவுக்கு என்ன ஆனது..?

2026 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சர்மா கடைசியாக விளையாடினார். அங்கு முதல் பந்திலேயே கோல்டன் டக் என ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய தொடக்க ஆட்டக்காரருக்கு அபிஷேக் சர்மா வயிற்றில் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் டாஸில் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அதில், அபிஷேக் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் போகலாம் என்று கூறினார்.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை எச்சரிக்கை.. தடைப்பட்டால் ரிசர்வ் நாள் உண்டா?

கடந்த ஒரு வாரத்தில் அபிஷேக் சர்மா வயிற்று வலி காரணமாக கிட்டத்தட்ட 2 கிலோ எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அபிஷேக் சர்மாவை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

 

Related Stories
India Vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை எச்சரிக்கை.. தடைப்பட்டால் ரிசர்வ் நாள் உண்டா?
India vs Pakistan: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?
India vs Pakistan 2026: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
ஆன்லைனில் கேம் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் இசைச் சாலை.. 70-80 கி.மீ. வேகத்தில் சென்றால் ‘ஜெய் ஹோ’ இசைக்கும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் 100 ஆண்டு கால பத்திரங்களை வெளியிட்ட ஆல்பபெட்
பீகாரில் இளைஞரை கடத்தி கட்டாய திருமணம் - பரபரப்பு தகவல்