Steven Smith Record: லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

South Africa vs Australia, WTC Final: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் அரைசதம் அடித்து 99 ஆண்டு பழமையான சாதனையை முறியடித்தார். 591 ரன்களுடன் லார்ட்ஸில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து அல்லாத வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தப் போட்டியில், ககிசோ ரபாடாவின் சிறப்பான பந்துவீச்சும் குறிப்பிடத்தக்கது.

Steven Smith Record: லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்டீவ் ஸ்மித்

Published: 

11 Jun 2025 22:39 PM

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா (South Africa) அணிகள் மோதியது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steven Smith) பல சாதனைகளை படைத்தார். வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 112 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஸ்மித் 99 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாற்றிம் பக்கங்களில் தனது பெயரை பதிவு செய்தார். அதாவது, லார்ட்ஸில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஸ்மித் படைத்தார்.

99 ஆண்டுகால சாதனை முறியடிப்பு:

ஸ்டீவ் ஸ்மித் லார்ட்ஸில் தனது 6வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித், 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 591 ரன்கள் எடுத்துள்ளார். 1909-1926 க்கு இடையில் லார்ட்ஸில் 575 ரன்கள் எடுத்த முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வாரன் பார்ட்ஸ்லியின் சாதனையை ஸ்மித் முறியடித்தார். வாரன் பார்ட்ஸ்லி 4 அரை சதங்கள் மற்றும் 2 சதங்கள் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸ் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். கேரி சோபர்ஸ் 1957 மற்றும் 1973 க்கு இடையில் 4 அரை சதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 571 ரன்கள் எடுத்துள்ளார்.

லார்ட்ஸில் இங்கிலாந்து அல்லாத பேட்ஸ்மேன்கள் எடுத்த அதிக டெஸ்ட் ரன்கள்

வீரர்கள் இடைப்பட்ட ஆண்டு காலம் லார்ட்ஸ் பதிவான ரன்கள் அரைசதம் சதம்
ஸ்டீவ் ஸ்மித் 2010-2025 591 5 2
வாரன் பார்ட்ஸ்லி 1909-1926 575 4 2
கேரி சோபர்ஸ் 1957-1973 571 4 2
டான் பிராட்மேன் 1930-1948 551 3 2
ஷிவ்நரேன் சந்தர்பால் 2000-2012 512 5 1
திலீப் வெங்சர்க்கார் 1979-1990 508 4 3

முதல் இன்னிங்ஸ்:

2023-25 ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்யத்தை ககிசோ ரபாடா சிதைத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா இப்போது பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தற்போது தடுமாறி வருகிறது.

Related Stories
India vs England Test Series: கில்லுக்கு 5 முறை மிஸ்! இந்திய அணிக்கு 15 முறை.. தொடர்ச்சியாக ராசியில்லாத டாஸ்..!
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?