PAK vs SA: 38 வயதில் பாகிஸ்தான் அணியில் இடம்.. ஓய்வு வயதில் அறிமுகமாகும் ஆசிஃப் அப்ரிடி!
South Africa tour of Pakistan: மூன்று அறிமுக வீரர்களில் ஆசிப் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இவரது வயது 38 என்பதால் ஓய்வு பெறும் நேரத்தில் பாகிஸ்தான் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், 22 வயதான ஃபைசல் அக்ரமும், 23 வயதான ரோஹெல் நசீருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிஃப் அப்ரிடி
2025 ஆசியக் கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி (Pakistan Cricket Team) இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. வருகின்ற 2025 அக்டோபர் 12ம் தேதி பாகிஸ்தான் மண்ணில் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி லாகூரிலும், இண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும் நடைபெறுகிறது. ஷான் மசூத் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கும் நிலையில், 3 புதுமுக வீரர்களான ஆசிப் அப்ரிடி, பைசல் அக்ரம் மற்றும் ரோஹெல் நசீர் களமிறங்குகின்றனர்.
ALSO READ: காயம் காரணமாக மீண்டும் வாய்ப்பு மிஸ்? ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்ட்யா?
38 வயதில் அறிமுகம்:
மூன்று அறிமுக வீரர்களில் ஆசிப் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இவரது வயது 38 என்பதால் ஓய்வு பெறும் நேரத்தில் பாகிஸ்தான் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், 22 வயதான ஃபைசல் அக்ரமும், 23 வயதான ரோஹெல் நசீருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தான் அணிக்குத் திரும்பியுள்ளார். அதைத் தவிர, ஆசியக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் முகாமில் இணைவார்கள்.
ஆசிஃப் அப்ரிடி யார்..?
Here is the Pakistan Test squad that will take on the Proteas in 2 weeks time
It is spin it to win it pic.twitter.com/zYmBcXnF4y
— Werner (@Werries_) September 30, 2025
ஆசிஃப் அப்ரிடி கடந்த 2009ம் ஆண்டு அபோட்டாபாத் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு, ஆசிஃப் அப்ரிடி 57 முதல் தர போட்டிகளில் விளையாடி 25.49 சராசரியாக 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், 13 ஐந்து விக்கெட்டுகளும், 2 பந்து விக்கெட்டுகளும் அடங்கும்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆசிஃப் அப்ரிடி 60 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளும், 85 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் அறிமுகமானார். 2025ம் ஆண்டு பிஎஸ்எல் போட்டியில் லாகூர் அணிக்காக 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ALSO READ: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி
ஷான் மசூத் (கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபிக், அப்ரார் அகமது, ஆசிப் அப்ரிடி, பாபர் ஆசம், பைசல் அக்ரம், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், குர்ரம் ஷாசாத், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சாவில் கான்ஜிர்- நோமன் அலி சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி
பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அட்டவணை
- 2025 அக்டோபர் 12-16 – முதல் டெஸ்ட் (லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியம்)
- 2025 அக்டோபர் 20-24 – இரண்டாவது டெஸ்ட் (ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம்)