Smriti Mandhana: திருமணம் எப்போது..? நீக்கப்பட்ட பதிவுகள்! ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு..!
Smriti Mandhana’s Wedding: ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள பக்கத்திலும் சில விஷயங்களை மேற்கொண்டுள்ளார். அதில், தனது நிச்சயதார்த்தத்தை அறிவிக்கும் வீடியோவை மட்டுமல்லாமல், திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். இந்த முடிவால் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல்
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) – பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் (Palash Muchhal) இடையேயான திருமணம் நேற்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த திருமணமானது மகாராஷ்டிராவின் சாங்கிலியில் மாலை 4.30 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. காலை உணவின் போது , ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனார். முதலில், இது ஒரு சிறிய பிரச்சினை என்று கருதப்பட்டது. சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக சாங்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் . இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: காதல் திருமணத்தில் கலக்கல் நடனம்.. அசத்திய ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல்!
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் எப்போது..?
#WATCH | Sangli, Maharashtra: Father of Indian cricketer Smriti Mandhana has been hospitalised.
Dr Naman Shah, Director of Sarvhit Hospital, says, “Srinivas Manandana, Smriti Manandana’s father, experienced symptoms of a heart attack around 11:30 after feeling left-sided chest… pic.twitter.com/hlRnkJwoB4
— ANI (@ANI) November 23, 2025
ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ராவின் கூற்றுப்படி, “ஸ்மிருதி மந்தனா தனது தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமணம் நடைபெறாது என்று முடிவு செய்துள்ளார். திருமணத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார்.” என்றார்.
இதற்கிடையில் ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள பக்கத்திலும் சில விஷயங்களை மேற்கொண்டுள்ளார். அதில், தனது நிச்சயதார்த்தத்தை அறிவிக்கும் வீடியோவை மட்டுமல்லாமல், திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். இந்த முடிவால் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ALSO READ: ஸ்மிருதி மந்தானாவின் தந்தைக்கு மாரடைப்பு.. ஒத்தி வைக்கப்பட்ட ஸ்மிருதி – பலாஷ் திருமணம்!
சோகத்தில் ஸ்மிருதி மந்தனா..
“லகே ரஹோ முன்னா பாய்” படத்தின் ஒரு பாடலுக்கு விளையாட்டுத்தனமாக ஸ்மிருதி மந்தனா தனது சக கிரிக்கெட் வீராங்கனைகளுடன் நடனமாடி, செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட வீடியோவை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் சக வீரர்களான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோரும் காணப்பட்டனர். ஸ்மிருதியின் இந்த நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அவர் பதிவுகளை நீக்கினாரா அல்லது மறைத்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், இந்திய மகளிர் அணி 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் கடந்த 2025 நவம்பர் 21ம் தேதி ஸ்மிருதிக்கு அவர் காதலை முன்மொழிவது போல் பலாஷ் முச்சால் பகிர்ந்து கொண்ட வீடியோ இன்னும் அவரது கணக்கில் உள்ளது.