Asia Cup hockey: ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்.. இந்திய ஆண்கள் அணிக்கு குவியும் வாழ்த்து!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் தில்பிரீத் இரண்டு கோல்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.

Asia Cup hockey: ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்.. இந்திய ஆண்கள் அணிக்கு குவியும் வாழ்த்து!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

Updated On: 

08 Sep 2025 09:28 AM

 IST

பீகார், செப்டம்பர் 8: ஆசியக் கோப்பை ஹாக்கி 2025 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் எஃப்ஐஎச் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.சுமார் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆண்கள் அணி ஆசிய கோப்பை ஹாக்கி கோப்பையை வென்றுள்ளது. இதனையடுத்து இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, ஐந்து முறை சாம்பியனான தென் கொரியாவுக்கு அடுத்து இரண்டாவது வெற்றிகரமான அணியாக மாறியுள்ளது. இந்திய அணி ஏற்கனவே கோலாலம்பூர் (2003 ) மற்றும் சென்னை (2007) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிகளை பெற்றது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2017 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரரான தில்ப்ரீத் 28வது, 45வது நிமிடங்களில் அசத்தலாக 2 கோல்கள் அடித்து அசத்தினார். அதேபோல் சுக்ஜீத் சிங் அமித் ரோஹிதாஸ் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றினர். மறுபக்கம் தென் கொரியா அணியின் ஒரு கோலை டெய்ன் சன் 51வது நிமிடத்தில் அடித்தார்.

Also Read:  கஜகஸ்தானை கதறவிட்ட இந்திய ஹாக்கி அணி.. 15-0 என்ற கணக்கில் அபார வெற்றி!

ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. ஆனால் தென் கொரியா வீரர்கள் போட்டியை எங்கேயும் விட்டுக்கொடுக்ககூடாது என்ற நோக்கத்தில் விளையாடியதால் கோல் அடிக்காமல் போனதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து 

Also Read:  பாகிஸ்தான் எதிராக விளையாட மறுத்த இந்திய வீரர்கள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து!

அவர் தனது பதிவில், “பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025ல் நமது ஆண்கள் ஹாக்கி அணி அற்புதமான வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகள். நடப்பு சாம்பியனான தென் கொரியாவை அவர்கள் தோற்கடித்ததால் இந்த வெற்றி இன்னும் சிறப்பு வாய்ந்தது! இது இந்திய ஹாக்கி மற்றும் இந்திய விளையாட்டுகளுக்கு பெருமை சேர்க்கும் தருணம். நமது வீரர்கள் இன்னும் அதிக உயரங்களை எட்டவும், நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.