WTC Final : ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்… 300 விக்கெட்டுகள் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் சாதனை

Pat Cummins Makes History: லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 ரன்கள் எடுத்தும் சாதனை படைத்தார்.

WTC Final : ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்... 300 விக்கெட்டுகள் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் சாதனை

பேட் கம்மின்ஸ்

Published: 

13 Jun 2025 15:32 PM

இங்கிலாந்து (England)  நாட்டில் உள்ள லண்டனின் (London) லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா (Australia) மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் பந்துவீச்சை  சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரே இன்னிங்க்ஸில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை படைத்தார். அவரைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹாலிவுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

இன்னிங்கிஸின் முதல் நாளில் வியான் முல்டரின் விக்கெட்டை வீழ்த்திய பேட் கம்மின்ஸ், இரண்டாம் நாளின் முதல் அமர்வில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட்டை வீழ்த்திய நிலையில் 300 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற தனது சாதனையை நிறைவு செய்தார். இரண்டாவது அமர்வில், கம்மின்ஸ் கைல் வெரன் மற்றும் மார்கோ ஜான்சனை ஒரே ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர் அவர் 45 ரன்கள் எடுத்திருந்த வியான் முல்டரை வீழ்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 14வது முறையாகும். இறுதியாக, கம்மின்ஸ் இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி மற்றொரு வரலாற்று சாதனை படைத்தார்.

ஒரு இன்னிங்க்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

 

கம்மின்ஸ் தனது ஆறாவது விக்கெட்டுக்கு காகிசோ ரபாடாவை வீழ்த்தினார். இதன் மூலம், இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கம்மின்ஸ் 18.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார்,

முன்னதாக இந்த சாதனை நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி வசம் இருந்தது. அவர் 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அதற்கு முன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸின் சாதனையை வெட்டோரி முறியடித்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வில்லிஸ் 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை விட 222 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?
Virat Kohli: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!