Neeraj Chopra: ஒரே ஒரு எறிதலில் முடிந்த வேலை.. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி!

World Championships Men's Javelin Throw Final: தங்க மகன் நீரஜ் சோப்ரா தனது முதல் எறிதலில் 84.85 மீட்டர் தூரத்தை எட்டினார். இது இன்று அதாவது 2025 செப்டம்பர் 18ம் தேதி உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னேற போதுமானதாக இருந்தது. அதாவது, இறுதிப் போட்டிக்கான தகுதியானது 84.50 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

Neeraj Chopra: ஒரே ஒரு எறிதலில் முடிந்த வேலை.. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி!

நீரஜ் சோப்ரா

Published: 

18 Sep 2025 08:30 AM

 IST

2025 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (2025 World Championships) இந்தியாவின் தங்க பதக்க நம்பிக்கையான நீரஜ் சோப்ரா, தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தி உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நடப்பு உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra), ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துகொள்வதற்காக தகுதி சுற்று போட்டியில் களமிறங்கினார். அங்கு, ஒரே ஒரு முயற்சியிலேயே அமர்களம் செய்து நீரஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ALSO READ: மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?

ஒரே ஒரு வீசுதலில் வேலையை முடித்த நீரஜ் சோப்ரா:


ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலுக்கான தகுதிச் சுற்று போட்டி நேற்று அதாவது 2025 செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்றது.இதில், குரூப் ஏ-வில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவும், சச்சின் யாதவும் இந்தக் குழுவிலிருந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறப் போட்டியிட்டனர். முதலில் நீரஜ் சோப்ராவின் முறை வந்தபோது, ​​தனது தனித்துவமான பாணியில் ஒரே ஒரு எறிதலுடன் குறிப்பிட்ட தூரத்தை எட்டி தகுதி பெற்றார். இதன்மூலம், அவரது வேலையும் எளிதாக முடிவடைந்தது.

தங்க மகன் நீரஜ் சோப்ரா தனது முதல் எறிதலில் 84.85 மீட்டர் தூரத்தை எட்டினார். இது இன்று அதாவது 2025 செப்டம்பர் 18ம் தேதி உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னேற போதுமானதாக இருந்தது. அதாவது, இறுதிப் போட்டிக்கான தகுதியானது 84.50 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  நீரஜ் சோப்ரா அதிக முயற்சி இல்லாமல், தனது முதல் முயற்சியிலேயே அதைக் கடந்து இறுதிப் போட்டிக்கு இடம் பெற்றார். இதன் பிறகு நீரஜ் சோப்ரா மீண்டும் ஈட்டியை எறியவில்லை. அதன்படி, இறுதிப் போட்டிக்காக தனது உடற்தகுதியையும் சக்தியையும் சேமிக்க முடிவு செய்து ஓய்வெடுக்க தொடங்கினார்.

ALSO READ: 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை மினாக்‌ஷி ஹூடா!

நீரஜ் சோப்ராவுடன் தகுதி பெற்ற மற்ற வீரர்கள் யார்..?

நீரஜ் சோப்ராவை தவிர, குரூப் ஏ-வைச் சேர்ந்த இரண்டு தடகள வீரர்கள் நேரடித் தகுதியைப் பெற்றனர். அதில், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தனது இரண்டாவது முயற்சியில் 87.21 மீட்டர் எறிதலுடன் தகுதி பெற்றார். இவர் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடந்த டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் நீரஜை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  போலந்தின் டேவிட் வாக்னரும் 85.67 மீட்டர் எறிதலுடன் இறுதிப் போட்டிக்கு இடம் பிடித்தார். இந்தியாவின் சச்சின் யாதவ் மூன்று முயற்சிகளையும் செய்தார். ஆனால், அவரால் அதிகபட்சமாக 83.67 மீட்டர் தூரம் மட்டுமே எறிய முடிந்தது. குரூப் பி தகுதிச் சுற்றுக்குப் பிறகு சச்சின் யாதவ் முதல் 12 இடங்களுக்குள் வந்து, அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.