World Boxing Championship 2025: 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை மினாக்‌ஷி ஹூடா!

Minakshi Hooda: 2025 செப்டம்பர் 14ம் தேதியான இன்று 24 வயதான மினாக்‌ஷி தனது எதிர் போட்டியாளரான பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வெற கஜகஸ்தானின் நாஜிம் கைசெபேவை தோற்கடித்து இந்தியாவுக்கு 2வது தங்கத்தை பெற்று தந்தார். இவர் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

World Boxing Championship 2025: 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை மினாக்‌ஷி ஹூடா!

மினாக்‌ஷி ஹூடா

Updated On: 

14 Sep 2025 20:45 PM

 IST

2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (World Boxing Championship 2025) பட்டத்தை வென்று இந்திய வீராங்கனை மினாக்‌ஷி ஹூடா (Minakshi Hooda) அசத்தியுள்ளார். இதன்மூலம், 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்மின் லம்போரியாவுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற 2வது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை மினாக்‌ஷி ஹூடா படைத்துள்ளார். இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ) மற்றும் மினாக்‌ஷி ஹூடா (48 கிலோ) ஆகியோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தனர். முன்னதாக நேற்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஜாஸ்மின் அற்புதமாக செயல்பட்டு, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற போலந்தின் ஜூலியா ஜரெமெட்டாவை 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

கலக்கிய மினாக்‌ஷி:


2025 செப்டம்பர் 14ம் தேதியான இன்று 24 வயதான மினாக்‌ஷி தனது எதிர் போட்டியாளரான பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கஜகஸ்தானின் நாஜிம் கைசெபேவை தோற்கடித்து இந்தியாவுக்கு 2வது தங்கத்தை பெற்று தந்தார். இவர் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஆசிய கோப்பை ஹாக்கியில் 4வது முறை சாம்பியன்.. உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற இந்திய அணி!

பிரதமர் மோடி பாராட்டு:

2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற 24 வயதான மினாக்‌ஷி ஹூடாவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

முன்னதாக, மற்றொரு இந்திய வீராங்கனையான நுபுர் ஷரோன் 80 கிலோ எடை பிரிவில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்காவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே நேரத்தில், அதேபிரிவான 80 கிலோ எடை பிரிவில் பூஜா ராணி பிரிட்டனின் எமிலி அஸ்கித்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

ALSO READ: மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இதுவரை பதக்கம் வென்றவர்கள் யார் யார்..?

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பட்டியலில் ஜாஸ்மின் மற்றும் மினாக்‌ஷி இணைந்தனர். இந்தப் பட்டியலில் ஏற்கனவே எம்.சி. மேரி கோம், நிகாத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி., நீது கங்காஸ், லோவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் ஸ்வீட்டி போரா போன்ற வீராங்கனைகள் தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.