IPL 2026 : அவரிடம் ஒழுக்கம் இல்லை – வைபவ் மீது ஆர்சிபி வீரர் குற்றச்சாட்டு
Jitesh Slams Vaibhav Discipline: ஆர்சிபி வீரர் ஜித்தேஷ் சர்மா, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வைபவ் சூர்யவன்ஷி சிறந்த வீரர் என்றாலும் மைதானத்திற்கு வெளியே அவரிடம் ஒழுக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவை சேரந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டியிருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அவர் முழுமைான புரொஃபெஷனல் ஆக மாட்டார் என ஜித்தேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே உலக கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். 15 வயதை எட்டியுள்ள சூர்யவன்ஷி, கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக சதங்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதையும் படிக்க : IPL 2026: பயிற்சியின்போது கால் வலி.. நடப்பதில் சிரமம்.. எம்.எஸ்.தோனி முழுமையாக விளையாடுவாரா?
‘வைபவ் சூர்யவன்ஷியிடம் ஒழுக்கம் இல்லை’
மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக இரு்தார். இந்த நிலையில், ஒரு இளம் வீரர் மீது மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டுமெனில் யாரை தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஜிதேஷ் சர்மா, வைபவ் சூர்யவன்ஷியையே தேர்வு செய்தார். இதுகுறித்து பேசிய அவர், அவர் உலக கிரிக்கெட்டை ஆளும் திறன் கொண்டவர். அவரிடம் மிகச்சிறந்த திறமை இருக்கிறது என்று பாராட்டினார்.
இதையும் படிக்க : IPL 2026: ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்.. ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட் வைத்த கெய்ல்..!
மேலும் பேசிய அவர், இவ்வளவு திறன் கொண்ட அவர், முழுமையான புரொஃபஷனல் வீரர் இல்லை. மைதானத்தில் நன்றாக விளையாடலாம். ஆனால் மைதானத்திற்கு வெளியே அவரிடம் ஒழுக்கம் இல்லை. அவரைப புரொஃபஷனலாக மாற்ற பலரும் முயற்சிக்கிறார்கள். நான் கூட அவரிடம் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம் என சொல்கிறேன் என்றார்.
ஆனால் அதற்கு மாறாக ஏபிடி வில்லியர்ஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல், போன்ற பெரிய மேடையில் விளையாடிய பிறகும், அதே அளவிலான கவனம் மற்றும் ஒழுக்கத்துடன் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அவர் மிகவும் திறமையான வீரர். தனது விளையாட்டை முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து இந்த சீசனில் அவர் இந்திய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.