IPL 2026: ஐபிஎல்லில் யாரும் படைக்காத சாதனை.. பஞ்சாப்க்கு எதிராக படைத்த ஹைதராபாத்!
SRH vs PBKS: ஐபிஎல் 2026 சீசனின் 49வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபாத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அதாவது 2026 மே 7ம் தேதி நடைபெற்ற 49வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை ஹைதராபாத் அணி பிடித்தது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் சாதிக்காத ஒரு சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.
ALSO READ: லக்னோவுக்கு செய் அல்லது செத்துமடி.. பெங்களூருவை வீழ்த்துமா ரிஷப் பண்ட் படை..?
அப்படி என்ன சாதனை..?
ஐபிஎல்லில் ஹைதராபாத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச தொடர் வெற்றிகள் இதுவே ஆகும். இதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வீழ்த்தி இந்த சாதனையை வைத்திருந்தது.
சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக தொடர் வெற்றி:
- 9 – ஹைதராபாத்தில் ஹைதராபாத் vs பஞ்சாப் (2015-26)*
- 8 – சென்னையில் சென்னை vs பெங்களூரு (2010-24)
- 7 – சென்னையில் சென்னை vs டெல்லி (2011-23)
- 7 – மும்பை வான்கடேவில் மும்பை vs கொல்கத்தா (2013-23)
ஹைதராபாத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட ஸ்டேடியத்தில், ஒரே அணிக்கு எதிராக 10 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வரலாற்றின் இரண்டாவது அணியாக ஹைதராபாத் அணி திகழ்கிறது. இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- 11 – மும்பை vs கொல்கத்தா (வான்கடே மைதானம்) – 13 போட்டிகள்
- 10 – ஹைதராபாத் vs பஞ்சாப் (ஹைதராபாத் மைதானம்) – 11 போட்டிகள்
- 9 – கொல்கத்தா vs பஞ்சாப் (கொல்கத்தா மைதானம்) – 15 போட்டிகள்
- 9 – சென்னை vs கொல்கத்தா (சென்னை மைதானம்) – 13 போட்டிகள்
ALSO READ: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. ஐபிஎல் புள்ளி பட்டியல் மாற்றம் என்ன?
ஹைதராபாத் வெற்றி:
ஐபிஎல் 2026 சீசனின் 49வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபாத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.