IPL 2026: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய MI, LSG.. எந்தெந்த அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு..?
IPL 2026 Playoffs: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் 50க்கு 50 வாய்ப்புகளை பெற்றுள்ளன. ஏனெனில், இரு அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் இன்னும் மூன்று போட்டிகளே மீதமுள்ளன.இந்த இரண்டு அணிகளும் இந்தப் போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட, பிளேஆஃப்களுக்கான அவற்றின் பாதை இருண்டுவிடும்.

மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 10ம் தேதி 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) வெற்றி பெற்றது. அதே சமயம், மாலையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த 2 போட்டிகளுக்குப் பிறகு, பிளேஆஃப் போட்டிக்கான பாதை இன்னும் கடினமாகியுள்ளது. அதேநேரத்தில், பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வெளியேறியுள்ளது.
ALSO READ: முதலிடத்தில் பெங்களூரு.. முன்னேறிய சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!
வெளியேறிய மும்பை மற்றும் லக்னோ:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துவிட்டன. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 3ல் மட்டுமே வெற்றி பெற்று, 8ல் தோல்வியடைந்துள்ளன. ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு தற்போது 3 போட்டிகள் மீதமுள்ளன. இந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றாலும், அவர்களால் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதனால், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது சாத்தியமற்றதாகிறது. இதன் காரணமாகவே இரு அணிகளும் பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்டன.
ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற, குறைந்தபட்சம் 14 புள்ளிகளையாவது பெற வேண்டும். இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளது. இந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேநேரத்தில், ஒரே ஒரு போட்டியில் தோற்றால் கூட வெளியேறிவிடும்.
இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் 50க்கு 50 வாய்ப்புகளை பெற்றுள்ளன. ஏனெனில், இரு அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் இன்னும் மூன்று போட்டிகளே மீதமுள்ளன.இந்த இரண்டு அணிகளும் இந்தப் போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட, பிளேஆஃப்களுக்கான அவற்றின் பாதை இருண்டுவிடும். அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னேறும் வாய்ப்புகளும் தற்போது நிச்சயமற்றதாகவே உள்ளன. ஏனெனில், அடுத்த சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், இது ஒரு கடினமான சவாலாக அமையக்கூடும்.
பிளே ஆஃப் செல்ல இந்த 4 அணிகளுக்கு அதிக வாய்ப்பு:
பிளேஆஃப்களுக்கான நான்கு முக்கிய போட்டியாளர்களாக நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது 14 புள்ளிகளுடன் +1.103 என்ற சிறந்த நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது. அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 14 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ALSO READ: முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்..? போட்டோ போட்டு கிண்டலடித்த அஸ்வின்!
பஞ்சாப் கிங்ஸ் அணி, 10 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுக்குப் பிறகு, 13 புள்ளிகளுடன் தற்போது புள்ளி அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும், பஞ்சாப் அணி தனது 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 21 புள்ளிகளை எட்டுவார்கள். இதன் காரணமாக, இந்த 4 அணிகளுக்கு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.