IPL 2026: மும்பையை அன் ஃபாலோ செய்தாரா ஹர்திக்..? அணிக்குள் புகைச்சலா?
Hardik Pandya Unfollow MI: ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக சமூக ஊடகங்களில் திடீரென செய்திகள் பரவத் தொடங்கின. மேலும், ஹர்திக் பாண்ட்யா தனது கணக்கிலிருந்து அணி தொடர்பான பதிவுகள் காணாமல் போகின.

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) மற்றும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா குறித்து சமூக வலைதளங்களில் ஒரு புதிய விவாதம் வெடித்துள்ளது. ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும், அணி தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வேகமாகப் பரவின. இது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையேயான உறவு முறிந்ததா என ரசிகர்களிடையே ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ALSO READ: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய MI, LSG.. எந்தெந்த அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு..?
காயத்தால் விலகினாரா ஹர்திக் பாண்ட்யா..?
ஐபிஎல் 2026 மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தபோதிலும், அவரால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது பந்துவீச்சிற்குப் பங்களிக்கவோ முடியவில்லை. இவரது மோசமான ஃபார்ம் காரணமாக, மும்பை அணி நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்து, ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனிலிருந்து நீக்கியது. மறுபுறம், ஹர்திக் பாண்ட்யா முதுகு காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ஹர்திக் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இருப்பினும், கேப்டன் மாற்றம் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.
மும்பை அணியை அன்ஃபாலோ செய்தாரா ஹர்திக் பாண்ட்யா?
ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக சமூக ஊடகங்களில் திடீரென செய்திகள் பரவத் தொடங்கின. மேலும், ஹர்திக் பாண்ட்யா தனது கணக்கிலிருந்து அணி தொடர்பான பதிவுகள் காணாமல் போகின. இது ரசிகர்களிடையே யூகங்களைத் தூண்டியது. அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் ஹர்திக் பாண்ட்யா மற்றொரு அணியில் சேரக்கூடும் என்று சில செய்திகள் கூறின. ஒரு சிலர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற இருப்பதாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து அழைப்பு வருவதாக கூறிகின்றனர்.
ஹர்திக் பாண்டியா சிறிது நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தொடர்வதை நிறுத்தி , சில பதிவுகளையும் நீக்கினார், ஆனால் பின்னர் மீண்டும் அந்த மும்பை அணியைப் பின்தொடரத் தொடங்கினார். ஹர்திக் பாண்ட்யாவின் காதலி மஹிகா ஷர்மாவும் மும்பை அணியை பிந்தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அல்லது ஹர்திக் பாண்டியா தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
ALSO READ: முதலிடத்தில் பெங்களூரு.. முன்னேறிய சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!
ஐபிஎல் 2026 சீசனில் ஹர்திக்கின் செயல்திறன்:
ஐபிஎல் 2026 சீசனில் ஹர்திக் பாண்டியா இதுவரை 8 போட்டிகளில் 20.8 சராசரியில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், பந்துவீச்சில் அவரால் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பந்துவீச்சில் அவரது 11.9 என்ற எகானமி ரேட் அணிக்கு கூடுதல் அழுத்தத்தை அளித்தது. மும்பை இந்தியன்ஸின் மோசமான ஆட்டமும், ஹர்திக்கின் ஃபார்ம் நிலையும் சீசன் முழுவதும் அணியை சிக்கலில் ஆழ்த்தின.