IPL 2026: களத்தில் நடுவருடன் வாக்குவாதம்.. அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!

Angkrish Raghuvanshi: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, ​​வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதாக கேகேஆர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அங்கிரிஷ் ரகுவன்ஷி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு , அவருக்கு அவரது போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2026: களத்தில் நடுவருடன் வாக்குவாதம்.. அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!

அங்கிரிஷ் ரகுவன்ஷி

Published: 

27 Apr 2026 18:15 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி நடந்த இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமான எண்ணிக்கையில் ரன்களை எடுத்ததால், போட்டியின் முடிவானது சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் லக்னோ அணியை கொல்கத்தா அணி தோற்கடித்தது. போட்டியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi) ஃபீல்டிங்கில் தொந்தரவு செய்தததற்காக ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால், ரகுவன்ஷி கடும் கோபமடைந்து, கள நடுவருடன் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, பெவிலியனுக்குத் திரும்பும்போது, ​​தனது பேட்டால் பவுண்டரி கோட்டைத் தாக்கி, தனது ஹெல்மெட்டை டக் அவுட்டிற்குள் வீசினார். தற்போது ரகுவன்ஷி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!

அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு:


ஃபீல்டிங் தொந்தரவு செய்ததற்காக அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கோபத்தை வெளிப்படுத்தியதற்காக, அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அவரது போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி லக்னோ (LSG) அணிக்கு எதிரான போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக ரகுவன்ஷி குற்றம் செய்ததாக கண்டறியப்பட்டார். கொல்கத்தா அணியின் இன்னிங்ஸின் 5வது ஓவரில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரகுவன்ஷி ஆத்திரத்தில் தனது பேட்டை எல்லைக்கோட்டில் அடித்ததோடு, பெவிலியனுக்குத் திரும்பும்போது தனது ஹெல்மெட்டை டக்அவுட்டிற்குள் வீசினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, ​​வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதாக கேகேஆர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அங்கிரிஷ் ரகுவன்ஷி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு , அவருக்கு அவரது போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் வழங்கப்படும் என்று ஐபிஎல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ: வெறும் 11 ரன்கள் மட்டும் போதும்.. மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் கோலி..!

போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் போன்றவற்றைச் சேதப்படுத்துவது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறிய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்படுவார்கள். போட்டி நடுவர் விதித்த தண்டனையை ரகுவன்ஷி ஏற்றுக்கொண்டு, தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?