IPL 2026: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!

ICC Fined Nitish Rana: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 19வது ஓவரின் போது நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸை கையுறைகளை மாற்ற அனுமதிக்காததால் ராணாவும் டெல்லி அணியும் கோபமடைந்தனர். ஓவரின் நடுவில் நடுவர் அனுமதி மறுத்ததால், ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார்.

IPL 2026: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!

நிதிஷ் ராணா

Published: 

12 Apr 2026 15:59 PM

 IST

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைத் தொடர்ந்து, நிதிஷ் ராணாவின் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஐபிஎல் (IPL) நடத்தை விதிகளின் ரேஞ்ச் 1-ஐ மீறியதற்காக அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக நிதிஷ் ராணா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. மேலும், இம்பாக்ட் வீரர் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இருப்பினும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்த பிறகு, ராணா பவுண்டரி லைனுக்கு வந்து 4வது அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, வைரலான வீடியோவில் ராணா கோபமாக இருந்ததோடு, தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

ALSO READ: எம்.எஸ்.தோனி எங்கே..? டாஸின்போது எழுந்த கேள்வி.. ருதுராஜ் சூசக பதில்!

தவறை ஒப்புக்கொண்ட நிதிஷ் ராணா:


ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் வீரர்களுக்கான நடத்தை விதிகளின் ரேஞ்ச் 1-ஐ மீறியதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணாவுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 25% அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது உரத்த மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ஐ ராணா மீறியது கண்டறியப்பட்டது. 19-வது ஓவரில், ராணா 4வது நடுவருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, நிதிஷ் ராணா தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: முன்னேற்றம் கண்ட சிஎஸ்கே.. யார் கடைசி இடம்..? ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல் இதோ!

நிதிஷ் ராணா ஏன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 19வது ஓவரின் போது நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸை கையுறைகளை மாற்ற அனுமதிக்காததால் ராணாவும் டெல்லி அணியும் கோபமடைந்தனர். ஓவரின் நடுவில் நடுவர் அனுமதி மறுத்ததால், ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அந்த நிலையில், டெல்லி அணி வெற்றி பெற 10 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டப்ஸ் ஆட்டமிழந்த பிறகு, நிதிஷ் ராணா கோபமடைந்து நடுவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, அவுட்டான ஸ்டப்ஸும் கோபமடைந்து  ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியில் தனது பேட்டையும் பின்னர் ஹெல்மெட்டையும் பலமாக எறிந்தார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?