IPL 2026: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!

IPL 2026 Orange and Purple Cap: 13-வது போட்டியானது கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அப்போட்டியின்போது மழையால் ஆட்டம் தடைபட்டது. மழையின் காரணமாக, ஆட்டம் தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றி கண்டது.

IPL 2026: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரவி பிஷ்னோய்

Published: 

08 Apr 2026 19:15 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, ஐபிஎல் 2026 தொடரில் 13 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 13-வது போட்டியானது கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அப்போட்டியின்போது மழையால் ஆட்டம் தடைபட்டது. மழையின் காரணமாக, ஆட்டம் தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றி கண்டது. இந்தநிலையில், இந்தப் போட்டிகளுக்குப் பிறகு எந்தெந்த வீரர்கள் அதிக ரன்களையும் விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப்களை தக்கவைத்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

ALSO READ: தாமதமாகும் எம்.எஸ்.தோனி வருகை.. ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!

ஆரஞ்சு கேப்:

ஐபிஎல் 2026 சீசனில் 13 லீக் போட்டிகளுக்குப் பிறகு, ஆரஞ்சு கேப் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் உள்ளது. ஜெய்ஸ்வால் இதுவரை 3 போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் 170 ரன்கள் எடுத்துள்ளார், இதில், அவரது சராசரி 170 மற்றும் ஸ்டிரைக் ரேட் 163.46 ஆகும். கவுகாத்தியில் மும்பைக்கு எதிரான போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸுக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி 160 ரன்களுடன் 2ம் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 145 ரன்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து, 15 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 122 ரன்களுடன் 4ம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா 118 ரன்களுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

பர்ப்பிள் கேப்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக பர்ப்பிள் கேப்பைத் தக்கவைத்துள்ளார். பிஷ்னோய் இதுவரை 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில், இந்த ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ALSO READ: பிரபல பஞ்சாபி நடிகையுடன் காதலா..? அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட புகைப்படம் வைரல்! 

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நந்த்ரே பர்கர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் விஜய்குமார் வைஷாக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜேக்கப் டஃபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளுடன் இடம்பெற்றுள்ளனர்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?