IPL 2025 Restart: மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகளை தயாரித்த பிசிசிஐ.. கிடைத்த சூப்பர் அப்டேட்!
IPL 2025 Resumes: ஐபிஎல் 2025, இந்தியா-பாகிஸ்தான் மோதலால் நிறுத்தப்பட்ட பின்னர், மீண்டும் தொடங்க உள்ளது. மீதமுள்ள 16 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பஞ்சாப்-டெல்லி போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது மறு அட்டவணையில் சேர்க்கப்படலாம். பிசிசிஐ, பாதுகாப்பு காரணங்களுக்காக சில மைதான மாற்றங்களைச் செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடங்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியா – பாகிஸ்தான் (India Pakistan Tensions) இடையிலான சண்டை காரணமாக ஐபிஎல் 2025 சீசனானது பாதியில் நிறுத்தப்பட்டது. இப்போது, இரு நாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதால், ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்பட இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஐபிஎல் மீண்டும் தொடங்குவதற்கு முன் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
மீதமுள்ள போட்டிகள்:
2025 ஐபிஎல் சீசனில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி, இந்த சீசனில் இன்னும் 12 லீக் போட்டிகளும், இறுதிப் போட்டி உட்பட 4 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மீண்டும் நடைபெற்றால், 13 லீக் போட்டிகள் நடைபெறலாம். அதன்படி, மீதமுள்ள இந்த போட்டிகளுக்கான அட்டவணையை இன்று அதாவது 2025 மே 12ம் தேதி அல்லது நாளை 2025 மே 13ம் தேதி அறிவிக்கப்படலாம்.
பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்:
ஐபிஎல் 2025 மீதமுள்ள போட்டிகளில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. கிடைத்த தகவலின்படி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் மிட்செல் ஸ்டார்க், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பில் சால்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டெவால்ட் பிரெவிஸ் போன்ற வீரர்கள் தங்கள் அணிகளுக்கும் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் vs டெல்லி போட்டி நடைபெறுமா..?
#IPL2025 #BCCI pic.twitter.com/LDYEEH94qa
— Fukkard (@Fukkard) May 10, 2025
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இப்போது ரத்து செய்யப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அந்தப் போட்டி மீண்டும் விளையாடப்படாது என்றும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025ல் மீதமுள்ள போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 3 அட்டவணைகளை தயாரித்துள்ளது. அதில், ஒன்றை பிசிசிஐ ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியிடப்படும். மேலும், பாதுகாப்பு காரணங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தரம்சாலாவிற்கு பதிலாக வேறு ஸ்டேடியமும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்திற்கு பதிலாக வேறு ஸ்டேடியம் வழங்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், மற்ற அனைத்து அணிகளின் போட்டிகளும் அந்தந்த மைதானங்களில் நடைபெறும். ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 2025 மே 16ம் தேதி முதல் தொடங்கலாம்.