Indian Cricket Team: ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்.. முதல் தர வீரருக்கு முன்னுரிமை!
India A Squad for England: 2025 ஜூனில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை BCCI மே 23 அன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பதும் அறிவிக்கப்படலாம். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா-ஏ அணியில் அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் IPL காரணமாக விலகியுள்ளனர். கருண் நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியா-ஏ அணியில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) வருகின்ற 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ (BCCI) அதிக கவனம் செலுத்துகிறது. அதன்படி, இதற்கான இந்திய கிரிக்கெட் அணியை வருகின்ற 2025 மே 23ம் தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநாளில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பதும் தெரியவரும். ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் கேப்டனாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு இந்தியா-ஏ அணி விளையாட இருக்கிறது. இதற்கு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஐபிஎல் 2025ஐ கருத்தில் கொண்டு முதல் போட்டியில் இருந்து விலக இருக்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தில், இந்தியா-ஏ அணி 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஏ அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2025 மே 30ம் தேதி முதல் தொடங்கும். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு முதல் தர போட்டிகளுக்குப் பிறகு, வருகின்ற 2025 ஜூன் 13ம் தேதி சீனியர் வீரர்களுக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடவுள்ளது.
இந்திய ஏ அணிக்கு யார் கேப்டன்..?
BCCI announce a strong squad for the upcoming India A tour of England, which precedes the upcoming five-match Test series 🇮🇳 pic.twitter.com/fM1lFcKA9d
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 16, 2025
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த அபிமன்யு ஈஸ்வரன், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கின்றனர். அதேபோல், இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியனும் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், 2017ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
கடந்த 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், 2025ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. கடந்த சில மாதங்களாக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பபடுத்தினார். இதன்காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயரே இந்தியா ஏ அணியின் கேப்டனாக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரே இந்தியா ஏ அணியில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா-ஏ அணி:
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, குத்துல்வா, அன்ஜூல் காம்போஜ், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.