ICC T20 Rankings 2025: ஐசிசி டி20 தரவரிசையில் கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 3க்கு முன்னேறிய திலக், வருண் சக்கரவர்த்தி!

T20 Cricket Rankings: 2025 ஜூன் 11ம் தேதி வெளியான ICC T20 தரவரிசையில், அடில் ரஷீத் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டிராவிஸ் ஹெட் பேட்டிங்கில் முதலிடத்திலும், ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் முதலிடத்திலும் உள்ளனர். ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர்களில் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் 6வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ICC T20 Rankings 2025: ஐசிசி டி20 தரவரிசையில் கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 3க்கு முன்னேறிய திலக், வருண் சக்கரவர்த்தி!

ஹர்திக் பாண்ட்யா - திலக் வர்மா - அர்ஷ்தீப் சிங்

Published: 

12 Jun 2025 11:43 AM

2025 ஜூன் 11ம் தேதி இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்திய டி20 தரவரிசை (T20 Rankings) பட்டியலை வெளியிட்டது. பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் (Adil Rashid), வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) 706 மதிப்பீடுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்தநிலையில், ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை முழுமையாக தெரிந்துகொள்வோம்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை:

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் உள்ளார். இவர், 856 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், திலக் வர்மா 804 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில், சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் சரிந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதன்படி, முதல் 10 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய வீரர் இவர்தான். மறுபுறம் பில் சால்ட் 791 மதிப்பீடுகளுடன் 5வது இடத்திலும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 772 மதிப்பீடுகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

டி20 பந்துவீச்சாளர் தரவரிசை:

ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஜேக்கப் டஃபி 723 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் 710 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 706 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர்களாக ரவிபிஷ்னோய் 674 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 653 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் தரவரிசை:

ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் 252 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் இவர்தான். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் ஸ்டோய்னிஸ் 210 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி 209 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். ஹர்திக் பாண்டியாக்கு பிறகு 12வது இடத்தில் அக்ஷர் படேல் உள்ளார்.

அணி தரவரிசையைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் அணி டி20 வடிவத்தில் முதலிடத்தில் உள்ளது. சூர்யகுமார் மற்றும் அணி 271 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Related Stories
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?