Indian Tennis Player Murdered: இந்திய டென்னிஸ் வீராங்கனை வீட்டில் சுட்டுக்கொலை.. தந்தையே கொன்ற சோகம்..!

Tennis Player Radhika Yadav Shot Dead: 25 வயதான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குறித்த தகராறே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. ராதிகாவின் தந்தை லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டார்.

Indian Tennis Player Murdered: இந்திய டென்னிஸ் வீராங்கனை வீட்டில் சுட்டுக்கொலை.. தந்தையே கொன்ற சோகம்..!

ராதிகா யாதவ்

Updated On: 

11 Jul 2025 11:53 AM

25 வயதான இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (Radhika Yadav) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக்-2ல் உள்ள அவரது இல்லமான E-157 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ராதிகாவை அவரது தந்தை சுட்டுக் கொன்றதாக (Father Kills Daughter) கூறப்படுகிறது. ராதிகா யாதவின் தந்தை தனது லைசன்ஸ் பெற்ற ரிவால்வரால் 3 முறை சுட்டார். இந்தநிலையில், ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் ராதிகாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது..?

குருகிராம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராதிகா யாதவிற்கும் அவரது தந்தையும் இடையே ரீல்ஸ் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. தந்தையின் பேச்சை கேட்காமல் ராதிகா யாதவ் தொடர்ந்து ரீல்ஸ் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த ராதிகாவின் தந்தை தனது மகளை 3 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. கொலைக்கு பிறகு ராதிகாவின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ராதிகாவின் தந்தை கொலை செய்ய பயன்படுத்திய ரிவால்வரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப் சிங் கூறுகையில், “இன்று அதாவது 2025 ஜூலை 10ம் தேதி குருகிராமில் உள்ள செக்டார் 56 காவல் நிலையத்தில், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு பெண்ணுக்கு சில துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது… மருத்துவமனையில் போலீசார் விசாரித்ததில், அந்தப் பெண்ணின் பெயர் ராதிகா என்றும், அவளுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும் கண்டறியப்பட்டது.” என்று தெரிவித்தார்.

யார் இந்த ராதிகா யாதவ்..?

கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ராதிகா யாதவ் குருகிராமில் பிறந்தார். தற்போது ராதிகா யாதவுக்கு 25 வயதாகிறது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். tenniskhelo.com இன் படி, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையில் ராதிகா யாதவ் 113 வது இடத்தில் உள்ளார். இது ITF இரட்டையர் பிரிவில் முதல் 200 இடங்களில் ராதிகாவின் சிறந்த தரவரிசையாகும்.

ராதிகா யாதவின் டென்னிஸ் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்தது. இந்தச் செய்தி வெளியான பிறகு, குருகிராமின் செக்டார் 57 இல் அமைதி நிலவுகிறது. இந்த சம்பவத்தால் சுற்றியுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராதிகாவின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.