Dilip Doshi Passes Away: சென்னை டெஸ்டில் அறிமுகம்.. 898 விக்கெட்டுகள்.. முன்னாள் இந்திய வீரர் மறைவு! பிசிசிஐ இரங்கல்..!

Indian cricket team: முன்னாள் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி, 77 வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1979 முதல் 1983 வரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சவுராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

Dilip Doshi Passes Away: சென்னை டெஸ்டில் அறிமுகம்.. 898 விக்கெட்டுகள்.. முன்னாள் இந்திய வீரர் மறைவு! பிசிசிஐ இரங்கல்..!

முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி மறைவு

Published: 

24 Jun 2025 11:30 AM

 IST

முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி (Dilip Doshi) தனது 77 வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர் உள்பட பல ஜாம்பவான்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பு லண்டனிற்கு (London) குடிபெயர்ந்த திலீப் அவரது மனைவி கலிங்கி, மகன் நயன் மற்றும் மகள் விசாகா ஆகியோருடன் வசிந்து வந்தார். அவரது மகன் நயன் தோஷி சர்ரே மற்றும் சவுராஷ்டிரா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் (Indian Cricket Team) பிஷன் சிங் பேடி ஓய்வு பெற்ற பிறகு, திலீப் ஜோஷி, கடந்த 1979ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1983ம் ஆண்டு தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

திலீப் தோஷியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இந்திய அணிக்காக இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி, இந்திய அணிக்காக இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதாவது 1979 முதல் 1983 வரை மட்டுமே விளையாடினார். திலீப் தோஷி இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி அந்தப் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக அந்தப் போட்டியில் 167 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் திலீப். டெஸ்ட் அறிமுகத்தில் ஒரு இன்னிங்ஸில் 9 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களில் திலீப் தோஷியும் ஒருவர்.

பிசிசிஐ இரங்கல்:


திலீப் தோஷி உள்நாட்டு கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், இங்கிலாந்தில் நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். அதன்படி, திலீப் தோஷி முதல் தர கிரிக்கெட்டில் 898 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

திலீப் தோஷி மறைவிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது சமூக வலைதளங்களில், “முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷியின் மறைவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். அவர் லண்டனில் துரதிர்ஷ்டவசமாக காலமானார்” என்று தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துமனை... தாயின் உடலை ஸ்ட்ரெச்சரில் சுமந்து சென்ற மகன்கள்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி.. சிறப்பு டிக்கெட்டுகளை அறிவித்த தேவஸ்தானம்..
25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா