Divya Deshmukh: மகளிர் செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற்றம்.. வெற்றிக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்ட திவ்யா தேஷ்முக்!

Women's World Chess Cup Semifinals: இந்தியாவின் திவ்யா தேஷ்முக், FIDE உலக மகளிர் சதுரங்கக் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். டை பிரேக்கில் சக இந்திய வீராங்கனை டி. ஹரிகாவை 2-0 என்ற கணக்கில் வென்று இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2026 உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Divya Deshmukh: மகளிர் செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற்றம்.. வெற்றிக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்ட திவ்யா தேஷ்முக்!

திவ்யா தேஷ்முக்

Published: 

22 Jul 2025 11:01 AM

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சர்வதேச மாஸ்டர் திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh), FIDE உலக மகளிர் சதுரங்கக் கோப்பையின் அரையிறுதிக்குள் (Women’s World Cup Chess Semifinals) நுழைந்து அசத்தியுள்ளார். காலியுறுதி போட்டியில் திவ்யா தேஷ்முக் சக இந்திய மகளிர் சதுரங்க வீராங்கனையான டி. ஹரிகாவை (Harika Dronavalli) டை பிரேக்கில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக, இருவருக்கும் இடையில் நடைபெற்ற கிளாசிக்கல் ஆட்டமும் இரண்டு முறை டிரா ஆனது. இதனை தொடர்ந்து, விரைவான டை பிரேக்கில் ஹரிகாவும், திவ்யாவும் மோதினர். அப்போது, திவ்யா தேஷ்முக் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி முதல் ஆட்டத்தை வென்றார். இது ஹரிகாவுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் திவ்யா தேஷ்முக் 2வது ஆட்டத்தையும் வென்றதுடன் போட்டியையும் வென்றார்.

இரண்டாவது இந்திய வீராங்கனைகள்:

முன்னதாக, உலக மகளிர் சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் போட்டியில் ஹரிகா மூன்று முறை அரையிறுதிப் போட்டிக்கு வந்துள்ளார். ஹம்பியும் இப்போது திவ்யாவும் மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு எட்டிய இரண்டாவது இந்தியர்களாக மாறிவிட்டனர். இந்தப் போட்டி புதிய உலக சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

ALSO READ: 2007க்கு பிறகு மீண்டும் பவுல்-அவுட் முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கலக்கிய தென்னாப்பிரிக்கா!

இந்த வெற்றியின்மூலம் அடுத்த 2026ம் ஆண்டு நடைபெறும் போட்டியில் ஒரு இந்திய வீராங்கனை களமிறங்குவார். அப்போது, உலக சாம்பியன்ஷிப்பில் சீனாவின் ஜூ வென்ஜுனை யார் எதிர்கொள்வார்கள் என்பது தெரியவரும். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தரவரிசையில் சிறந்த இடத்தில் உள்ள இந்திய வீராங்கனையான கோனேரு ஹம்பி, தனது சதுரங்க வாழ்க்கையில் முதல் முறையாக கடைசி நான்கில் இடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் ஆண் வீரர்கள் சதுரங்க போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திவ்யா தேஷ்முக் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் சதுரங்கத்தில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. கோனேரு ஹம்பி அரையிறுதியில் முதலிடத்தில் உள்ள சீன லீ டிங்ஜியை எதிர்கொள்வார். அதே நேரத்தில், திவ்யா முன்னாள் சீன பெண்கள் உலக சாம்பியனான டான் ஜோங்கியை எதிர்கொள்வார்.

சதுரங்க போட்டியில் அசத்தும் டி.குகேஷ்:

இந்த 2025 ஜூலை மாத தொடக்கத்தில், உலக செஸ் சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், கிராண்ட் செஸ் டூர் ரேபிட் 2025 இன் ஜாக்ரெப் லெக்கின் ஆறாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 10 புள்ளிகளுடன் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார். முதல் நாளில் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்ற குகேஷ், நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துஸ்சத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். இது கார்ல்சனுக்கு எதிரான குகேஷ்வின் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும்.

ALSO READ: பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்த இந்திய வீரர்கள்.. கடுமையாக சாடிய ஷாஹித் அப்ரிடி!

கடந்த 2025 ஜூன் மாதம், குகேஷ் நார்வேஜியன் சதுரங்கத்தில் கார்ல்சனை தோற்கடித்தார். முதல் போட்டியில் போலந்தின் டுடாவால் 59 நகர்வுகளில் குகேஷ் தோற்கடிக்கப்பட்டார். இதன் பிறகு, குகேஷ் மீண்டும் களமிறங்கினார். அப்போது, குகேஷ் பிரான்சின் அலிரேசா ஃபிரோசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோரை தோற்கடித்தார்.