ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி? – ரசிகர்கள் அதிர்ச்சி!

விராட் கோலி விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு இது பெரும் இழப்பாக அமைந்துள்ளது. பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளது. ரோகித் சர்மா ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், இது பிசிசிஐக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி? - ரசிகர்கள் அதிர்ச்சி!

விராட் கோலி

Published: 

10 May 2025 08:49 AM

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர், முன்னாள் கேப்டனான விராட் கோலி (Virat Kohli) விரைவில் டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது விருப்பதை விராட் கோலி பிசிசிஐயிடம் (BCCI) கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் விராட் கோலியின் இந்த முடிவு மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பிசிசிஐக்கு வந்த சிக்கல்

ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார். விராட் கோலியும் இப்படிப்பட்ட முடிவில் இருப்பது பிசிசிஐக்கு தலைவலியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாகவே அவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025, ஜூன் மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியும் விளையாடாத பட்சத்தில் இந்திய அணி பெரும்பாலும் இளம் வீரர்களுடன் கூடியதாக இருக்கும். அப்படியான நிலையில் அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து பிசிசிஐ ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.இது மிகப்பெரிய சவால் மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிக்கான அணியை வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரீத் பும்ரா வழி நடத்தியிருந்தார். கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட்டார்.

மறைமுகமாக சொன்ன விராட் கோலி

ஆனால் இந்த தொடரில் அவர் அடைந்த காயம் அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாதபடி மாற்றி விட்டது. இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் தான் அவர் காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரின் காயத்தின் தன்மை கொண்டு அணியை வழிநடத்த பிசிசிஐ தேர்வாக பும்ரா இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. அவருக்குன் அடுத்ததாக தேர்வுக்குழுவின் கவனத்தில் சுப்மன் கில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2024 டிசம்பர், 2025 ஜனவரியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி சொந்த மணி ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதுதொடர்பாக பேசிய விராட் கோலி, “அடுத்த 4 ஆண்டுகளில் எனக்கு மீண்டும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இல்லாமல் போகலாம் என கூறியிருந்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணியுடனான படுதோல்வி நீண்ட காலமாக என்னை தொந்தரவு செய்தது. ஆனால் இது அப்படியில்லை. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.