India-Pakistan: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து..? இதனால் யாருக்கு எவ்வளவு இழப்பு?

Asia Cup 2025: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய போட்டி டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்தாகிவிட்டது. இப்படியாக சூழ்நிலையில், ஆசிய கோப்பை 2025 போட்டி ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயும் பாதிக்கும். இது தவிர, கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்படுவதால் பிசிசிஐயின் பிம்பமும் உடைந்து சுக்குநூறாகும்.

India-Pakistan: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து..? இதனால் யாருக்கு எவ்வளவு இழப்பு?

சூர்யகுமார் யாதவ் - பாகிஸ்தான் அணி

Published: 

14 Sep 2025 18:42 PM

 IST

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த போட்டி நடைபெறக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த மோதல் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது காரணத்தால் அது ரத்து செய்யப்பட்டால், யாருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்? போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டாலும், போட்டியை நடத்துவது பிசிசிஐ கையில் உள்ளது. இதனால், பிசிசிஐக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கான பதிலை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிசிசிஐக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?

இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டால், அதன் முதல் பாதிப்பு ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் மீதே ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை மற்றும் ஏசிசி நடத்தும் ஆசியக் கோப்பையில் மட்டும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கை பெரிய சாதனைகளை முறியடித்து வருகிறது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான 2025 ஆசிய கோப்பை போட்டியில் நடைபெறவில்லை என்றால், சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒளிபரப்பு ஒப்பந்தம் இழக்கப்படும். ஒரு ஆசிய கோப்பையின் அடிப்படையில், 2025 ஆசிய கோப்பையின் பிசிசிஐயின் பங்கான ரூ. 375 கோடி இழப்பை சந்திக்கும்.

ALSO READ: கிரிக்கெட் களத்தில் இந்தியா – பாகிஸ்தான்.. எந்த அணி டாப்? நடக்கப்போவது என்ன?

அடுத்த 4 ஆசிய கோப்பை போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் 170 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக, கடந்த 2024ம் ஆண்டில் ஒரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்திருந்தார். இந்திய மதிப்பில், இது சுமார் ரூ.1500 கோடிக்கு சமம். இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் மட்டுமே பிசிசிஐ இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. 2025 ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லை என்றால், ஒளிபரப்பாளர்கள் பிசிசிஐயிடம் கேள்விகளை எழுப்புவார்கள். இந்த நிலைமை மோசமடைந்தால், பிசிசிஐயின் இந்த கோடிக்கணக்கான ஒப்பந்தமும் பாதியிலேயே முடிவடையும்.

பிசிசிஐ காரணமாக ஒளிபரப்பாளர்களும் இடையே இழப்பு:


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியை காண பார்வையாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விளம்பர இடங்களுக்கு ஒளிபரப்பாளர் அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசி போன்ற முக்கிய போட்டிகளில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான 10 வினாடி விளம்பர இடம் ரூ.25-30 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், போட்டி நடக்கவில்லை என்றால், எந்த நிறுவனம் ஒப்பந்தத்தைத் தொடர விரும்பாது.

ஸ்பான்சர்களாக பெரிய நிறுவனங்கள்:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின் ஸ்பான்சர்களாக பெரிய நிறுவனங்கள் வரிசையில் உள்ளன. இருப்பினும், ஆசிய கோப்பைக்கான டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனமும் தற்போது இல்லை. ஏனெனில் ஆன்லைன் கேமிங் மசோதாவுக்குப் பிறகு, ட்ரீம் 11 மற்றும் பிசிசிஐ இடையேயான ஒப்பந்தம் முடிந்தது. ஆனால், நைக் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் இந்திய அணிக்கு வெவ்வேறு வழிகளில் ஸ்பான்சர் செய்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கவில்லை என்றால், ஒளிபரப்பாளரைத் தவிர, ஸ்பான்சர்கள் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பலாம்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய போட்டி டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்தாகிவிட்டது. இப்படியாக சூழ்நிலையில், ஆசிய கோப்பை 2025 போட்டி ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயும் பாதிக்கும். இது தவிர, கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்படுவதால் பிசிசிஐயின் பிம்பமும் உடைந்து சுக்குநூறாகும்.

ALSO READ: ஆசிய கோப்பையில் முதலிடத்தில் யார்…? இந்தியாவா..? ஆப்கானிஸ்தானா..? புள்ளிகள் பட்டியல் இதோ!

2025 ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் எத்தனை முறை மோதும்..?

இந்தப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை மோதலாம். குரூப் நிலையிலும், பின்னர் சூப்பர்-4 நிலையிலும், இறுதியாக இறுதிப் போட்டியிலும் அவர்கள் மோத வாய்ப்புள்ளது. இந்த 3 உயர்மட்ட போட்டிகளும் பிசிசிஐக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடும்.