Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?
IND vs PAK Head to Head Record: 1984 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 18 முறை மோதியுள்ளன. இந்தியா 10 வெற்றிகளுடனும், பாகிஸ்தான் 6 வெற்றிகளுடனும் உள்ளது. இரண்டு போட்டிகள் டிராவாக முடிந்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான்
கடந்த 1984ம் ஆண்டு முதல் ஆசியக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறவுள்ள 2025 ஆசியக் கோப்பையானது (2025 Asia Cup) 17வது பதிப்பு ஆகும். ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை மொத்தம் 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் மொத்தம் ஐந்து முறை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி, அதில் இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு அதாவது 2025 செப்டம்பர் 14 ம் தேதி 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் (India – Pakistan) அணிகள் மோத இருக்கின்றன. அதற்கு முன், ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் (Asia Cup IND vs PAK Head to Head Record) நேருக்கு நேர் சாதனை எப்படி இருக்கிறது என்று தெரியுமா?
ALSO READ: பாபர், ரிஸ்வான் நீக்கம்! இளம் வீரர் தலைமையில் களமிறங்கும் இறங்கும் பாகிஸ்தான் அணி!
ஆசியக் கோப்பை: நேருக்கு நேர் சாதனை
ஆசிய கோப்பை இதுவரை ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 10 முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இரு அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. அதன்படி, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை 10-6 ஆகும்.
ஆசியக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் வெற்றியைப் பெற்றது. அப்போது, சுனில் கவாஸ்கர் தலைமையில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. ஆசியக் கோப்பை வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இது நான்காவது பெரிய வெற்றியாகும்.
ALSO READ: கில்லை விட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு.. ஆசியக் கோப்பையில் இடமில்லையா..? முன்னாள் இந்திய வீரர் கருத்து!
இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளதா..?
ஆசிய கோப்பை தொடங்கி 41 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதில், ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியானது 16 முறை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை மறுக்க முடியாத உண்மை. இந்தியா 11 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் 9 முறை இலங்கையையும் 2 முறை வங்கதேசத்தையும் எதிர்கொண்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் 5 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அதில், 4 முறை இலங்கையையும் ஒரு முறை வங்கதேசத்தையும் எதிர்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு முறை கூட ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது இல்லை.