Andre Russell Retirement: வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

West Indies All-rounder Andre Russell: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது கடைசி இரண்டு போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஜமைக்காவில் உள்ள அவரது சொந்த மைதானத்தில் நடைபெறும்.

Andre Russell Retirement: வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஆண்ட்ரே ரஸல்

Published: 

17 Jul 2025 11:13 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி (AUS vs WI T20 Series), அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரானது வருகின்ற 2025 ஜூலை 20 முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் (Andre Russell) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகள் அவரது கடைசி போட்டிகளாக இருக்கும்.

ஆண்ட்ரே ரஸல் ஓய்வு:

5 போட்டிகள் கொண்ட தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 37 வயதான ஆண்ர்டே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க்கில் நடைபெறுகிறது. இது ஆண்ர்டே ரஸலின் சொந்த மைதானமாகும். அதன்படி, ரஸல் தனது சொந்த ஸ்டேடியத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஆண்ட்ரே ரஸலின் அதிகாரப்பூர்வ ஓய்வை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சமூக ஊடக பதிவு மூலம் அறிவித்துள்ளது.

ALSO READ: முதலிடத்தில் மீண்டும் அரியணை! டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோ ரூட்..!

ஆண்ட்ரே ரஸல் தனது ஓய்வு குறித்த அறிக்கையில், “அதன் அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியது என் வாழ்க்கையின் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். நான் குழந்தையாக இருந்தபோது, இந்த நிலையை அடைவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நீங்கள் விளையாட தொடங்கி விளையாட்டை நேசிக்கும்போது, நீங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதை நீங்கள் உணருவீர்கள். இது என்னை சிறந்தவராக மாற தூண்டியது. ஏனென்றால், நான் மெரூன் நிறத்தில் (வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெர்சி நிறம்) எனது அடையாளத்தை விட்டு செல்ல விரும்பினேன். மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்க விரும்பினேன்.

எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ்:

நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை விரும்புகிறேன். மேலும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வீட்டில் விளையாடுவதையும் விரும்புகிறேன். அங்கு எனது திறமையை வெளிப்படுத்தவும், இன்னும் சிறப்பாக செயல்படவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எனது சர்வதேச வாழ்க்கையை சிறப்பாக முடித்து, அடுத்த தலைமுறை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மாற விரும்புகிறேன்.” என்றார்.

ALSO READ: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!

ஆண்ட்ரே ரஸலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ஆண்ட்ரே ரஸல் கடந்த 2019ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 84 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 1,078 ரன்களும், 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில், ரஸல் தனது வாழ்க்கையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 1,034 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆண்ட்ரே ரஸல் 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.