IndvsZim : அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம் – ஜிம்பாப்வேவுக்கு 257 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை தொடரில்  சூப்பர் 9 சுற்றில் 2வது போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கவிருக்கிறது.

IndvsZim : அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம் - ஜிம்பாப்வேவுக்கு 257 ரன்கள் இலக்கு

அபிஷேக் சர்மா

Updated On: 

26 Feb 2026 21:08 PM

 IST

டி20 உலகக்கோப்பை தொடரில்  சூப்பர் 9 சுற்றில் 2வது போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடி துவக்கம் தந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி தனது தேர்வை நியாயப்படுத்தினார். கடந்த சில போட்டிகளில் தொடக்க வீரர்கள் சொதப்பி வந்த நிலையில் முதல் சில ஓவர்களில் சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியாக ஆடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம்

மேலும், 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சன் பிளெஸ்ஸிங் முஸரபானி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இஷான் கிஷானுடன் அபிஷேக் சர்மா இணைந்து பந்துகளை நான்கு புறமும் சிதரடித்தார். மற்றொரு பக்கம் இஷான் கிஷனும் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க : ரோஹித் சர்மாவின் ஆல் டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா!

தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பேட் மூலம் பதிலளித்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிக்க : கவுதம் காம்பீர் செய்யும் அரசியல் தான் காரணம்…. பாகிஸ்தான் அணி வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

ருத்ர தாண்டவமாடிய ஹர்திக் பாண்ட்யா – திலக் வர்மா

இறுதியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 23 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர். ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா இணைந்து கடைசி ஓவர்களில் ருத்ர தாண்டவமாடினர். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார். திலக் வர்மா தன் பங்குக்கு 16 பந்துகளில் 44 பந்துகளை அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தினார். இருவரது அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புகளுக்கு 256 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது. இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கவிருக்கிறது.

Follow Us
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?