ICC Cricket World Cup 2027: 2027 உலகக் கோப்பை நடைபெறும் ஸ்டேடியங்கள் இதுதான்.. ஐசிசி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
2027 Cricket World Cup Venues: 2027 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 போட்டிகள், தென்னாப்பிரிக்காவில் 44 போட்டிகளும், மீதமுள்ள 10 போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவிலும் நடைபெறும்.

2027 உலகக் கோப்பை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2027 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை (ICC Cricket World Cup 2027) நடத்தும் நாடுகள் மற்றும் மைதானங்களை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் என்பது ஏற்கனவே தெரிந்தது. இந்தநிலையில், 2027 உலகக் கோப்பையில் மொத்த 54 போட்டிகளில், 44 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள 8 ஸ்டேடியங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்காவும் (South Africa) ஜிம்பாப்வேயும் இணைந்து உலகக் கோப்பையை நடத்துவது இது இரண்டாவது முறை என்பதால், நமீபியா முதல் முறையாக உலகக் கோப்பையை நடத்துவதால் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 54 போட்டிகள்:
2027ம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து முதல் முறையாக நடத்துகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்த 54 போட்டிகளில், 44 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன், டர்பன் மற்றும் பிரிட்டோரியா உள்ளிட்ட 8 ஸ்டேடியங்களில் நடைபெறுகிறது. மீதமுள்ள 10 போட்டிகளை ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெறும். இந்தப் போட்டியில் 14 அணிகள் மோதும் என்பதால், கிட்டத்தட்ட 2003 உலகக் கோப்பையைப் போலவே நடைபெறும். தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு விளையாடப்படும்.
ALSO READ: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!
எந்த ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெறும் ?
🚨🇿🇦 Cricket South Africa has announced: SA to host 44 matches of the 2027 Cricket World Cup, Zimbabwe & Namibia 10 matches
Host cities in SA: Johannesburg, Pretoria, Cape Town, Durban, Gqeberha, Bloemfontein, East London, and Paarl pic.twitter.com/JWG82UU3MU
— Cricket Business HQ (@cric_businessHQ) August 23, 2025
இந்த உலகக் கோப்பையில் 44 போட்டிகளை நடத்தும் உரிமை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் எட்டு முக்கிய மைதானங்களில் நடைபெறும்:
- ஜோகன்னஸ்பர்க்: வாண்டரர்ஸ் மைதானம்
- கேப் டவுன்: நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
- டர்பன்: கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம்
- பிரிட்டோரியா: செஞ்சுரியன் பூங்கா
- ப்ளூம்ஃபோன்டைன்: மங்காங் ஓவல்
- ககேபெர்ஹா: செயிண்ட் ஜார்ஜ் பூங்கா
- கிழக்கு லண்டன்: பஃபலோ பார்க்
- பார்ல்: போலந்து பூங்கா
இந்த மைதானங்கள் அவற்றின் அதிநவீன வசதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக அறியப்படுகின்றன. இது வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவருக்கும் ஒரு அற்புதமான அனுபவத்தை தரும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நம்புகிறது.
ALSO READ: மகளிர் உலகக் கோப்பை அட்டவணை மாற்றம்.. புறக்கணிக்கப்பட்ட பெங்களூரு.. ஐசிசி அதிரடி!
திட்டமிடல்:
2003 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வே மற்றும் கென்யாவுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது, இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த முறையும், இந்த 3 நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு பிரமாண்டமான மற்றும் வெற்றிகரமான உலகக் கோப்பை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.