Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீங்கள் சிறந்த ஆசிரியர்.. பிரமுக் சுவாமி மகாராஜை புகழ்ந்த அப்துல்கலாம்!

அப்துல் கலாம், பிரமுக் சுவாமியிஅப்துல் கலாம், பிரமுக் சுவாமியின் வாழ்க்கையை 14 ஆண்டுகள் தான் கவனித்ததாகவும், இணை ஆசிரியர் பேராசிரியர் அருண் திவாரியுடன் இணைந்து இந்த Transcendence புத்தகத்தை எழுத 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் இளைஞர்களுக்கும் அறிவுரை வழங்கியிருப்பார்.

நீங்கள் சிறந்த ஆசிரியர்.. பிரமுக் சுவாமி மகாராஜை புகழ்ந்த அப்துல்கலாம்!
அப்துல் கலாம் - பிரமுக் சுவாமி மகாராஜ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Sep 2025 16:34 PM IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிரமுக் சுவாமி மகாராஜை சிறந்த ஆசிரியர் என சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் அப்துல் கலாம் மத்திய பிரதேசத்தின் சாரங்பூர் குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திருக்கு வருகை தந்திருந்தார். அப்போது தான் எழுதிய “Transcendence” என்ற புத்தகத்தை பிரமுக் சுவாமி மகாராஜுக்கு வழங்கினார். இந்த புத்தகம் சுவாமிஜியுடனான 14 ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கிறது. அப்துல் கலாம், பிரமுக் சுவாமியின் வாழ்க்கையை 14 ஆண்டுகள் தான் கவனித்ததாகவும், இணை ஆசிரியர் பேராசிரியர் அருண் திவாரியுடன் இணைந்து இந்த புத்தகத்தை எழுத 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பான நிகழ்ச்சியின் போது அப்துல் கலாம், பிரமுக் சுவாமி மகாராஜுக்கு தனது கையெழுத்திடப்பட்ட பிரதியை வழங்கி, “நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர். உங்களிடமிருந்து நான் மற்றும் என் என்ற எண்ணத்தை ஒழிக்க கற்றுக்கொண்டேன்” என்று கூறினார். பின்னர் டாக்டர் அப்துல் கலாம், பிரமுக் சுவாமி முன் தனது புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படித்து, புத்தகத்தை சாத்தியமாக்க உதவிய அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, 3 ஆயிரம் இளைஞர்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்றார். அப்போது பிரம்மவிஹாரி சுவாமி, அப்துல் கலாம் மற்றும் பிரமுக் சுவாமி மகாராஜ் இடையேயான நட்பு, ஆன்மீகம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் பரஸ்பர பிணைப்புகளைப் பற்றி சுருக்கமாகப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அப்துல் கலாம், இளைஞர்களிடம் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “இதயத்தில் நீதி இருக்கும் இடத்தில் குணத்தில் அழகு இருக்கும். குணத்தில் அழகு இருக்கும் இடத்தில் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும். வீட்டில் நல்லிணக்கம் இருக்கும் இடத்தில் தேசத்தில் ஒழுங்கு இருக்கும். தேசத்தில் ஒழுங்கு இருக்கும் இடத்தில் உலகில் அமைதி இருக்கும். பிரமுக் சுவாமியில் நான் நீதியைக் கண்டேன், அதனால் அவரில் அமைதி இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் இளைஞர்கள் உயர்ந்த குறிக்கோளைக் கொண்டு, அவர்களின் அறிவை அதிகரித்து, கடினமாக உழைத்து, பிரச்சினைகளில் தங்களை மூழ்கடிக்க விடாமல் தனித்துவமாக உருவாகுமாறு அறிவுறுத்தினார்.