Vastu Tips: தூங்கும்போது இப்படி செய்யாதீங்க.. பண பிரச்னை வரலாம்!
இந்து மத வாஸ்து சாஸ்திரப்படி, படுக்கைக்கு அடியில் பணம், நகை, செல்போன், சாவிகள் போன்றவற்றை வைப்பது அசுபமாக பார்க்கப்படுகிறது. இது லட்சுமி தேவியின் அருளைத் தடுத்து நிதிப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்கிறது. இவற்றை பாதுகாப்பான இடத்தில் வைப்பது செல்வ வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நிலம் சார்ந்த அடிப்படையை கொண்டுள்ள வாஸ்து தற்போது அனைத்து விஷயங்களுக்கும் பார்க்கப்படுகிறது. அத்தகைய வாஸ்து சாஸ்திரத்தில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட ஒருவர் நிதி, மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்திருக்கிறார்கள் என்பதை சரியாக பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் வாஸ்துவின் படி , நாம் தூங்கும் போது சில பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. இந்த பொருட்களையெல்லாம் தலையணை அல்லது படுக்கைக்கு அடியில் வைத்திருப்பது நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர். அதனைப் பற்றிக் காணலாம்.
நம் அனைவருக்குமே படுக்கும் இடத்தில் சில பொருட்களை வைக்கும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் படுக்கை அல்லது தலையணைக்கு அடியில் பணம், நகைகள்,செல்போன் மற்றும் சாவிகளை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. இது சாஸ்திரத்தின்படி எதிர்மறையானது என கூறப்படுகிறது. லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தை நாம் பெற வேண்டும் என்றால் இந்தப் பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றுவது நிதி மற்றும் மன அமைதியைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
அப்படி என்ன செய்யக்கூடாது?
பணம் மற்றும் பணப்பையை வைத்திருக்க வேண்டாம்
தூங்கும் போது தலையணை அல்லது படுக்கைக்கு அடியில் எக்காரணம் கொண்டும் பணம் மற்றும் பணப்பையை வைக்கக்கூடாது என்று வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது. படுக்கைக்கு அடியில் பணம் அல்லது பணப்பையை வைத்திருக்கும் பழக்கம் லட்சுமி தேவியை கோபப்படுத்தும் என நம்பப்படுகிறது. இது செல்வ ஓட்டத்தை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. அத்தகைய நபர்கள் எப்போதும் நிதி சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கம் அல்லது வெள்ளி நகைகள்
கழுத்தில், கையில் போட்டிருக்கும் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை நாம் தூங்கும்போது இடையூறாக இருக்கிறது என கழட்டி வைக்கும் பழக்கம் உள்ளது. அப்படி மதிப்புமிக்க பொருட்களை நாம் தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது. இது வாழ்க்கையில் அசுபங்களையும் தடைகளையும் அதிகரிக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எப்போதும் பாதுகாப்பான இடத்தில் அல்லது பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும், இதனால் லட்சுமி தேவி மற்றும் குபேரரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருக்கும் என கூறப்படுகிறது.
சாவியை வைக்காதீர்கள்
ஒருவர் தனது வீடு, வாகனம் அல்லது லாக்கர் சாவியை தலையணை அல்லது படுக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு ஒருபோதும் தூங்கக்கூடாது. அவ்வாறு செய்வது துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது. படுக்கைக்கு அடியில் சாவியை வைத்துக்கொண்டு தூங்குவது குடும்பத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் செல்போன் போன்ற மின்னணு சாதனங்களையும் படுக்கைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)