தைப்பூசம் 2026.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்குது அதிர்ஷ்டயோகம்..
Thaipusam 2026: இந்த தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானின் அருளால் பெரும் செல்வம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை முன்னேற்றம் பெறவிருக்கும் அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தைப்பூசத் திருநாளன்று முருகப்பெருமானின் அருளும் அனுகிரகமும் பரிபூரணமாக அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தைப்பூசம் 2026
இந்த வருடம், அதாவது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, முருகப்பெருமானுக்கே உகந்த நன்னாளான தைப்பூசத் திருநாள் வருகிறது. இந்த தைப்பூசத் திருநாளில், முருகப்பெருமானுடைய அதி தீவிர அருள்பார்வை கிடைக்கக்கூடிய சில ராசிகளுக்கு, குபேர யோகம் என்றும் சொல்லப்படும் செல்வந்த யோகம், கோடீஸ்வர யோகம் ஏற்படவுள்ளது. அந்த வகையில், இந்த தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானின் அருளால் பெரும் செல்வம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை முன்னேற்றம் பெறவிருக்கும் அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..
குறிப்பாக, இந்த நான்கு ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் வலுவாக இருப்பினும், 12 ராசிக்காரர்களுக்குமே தைப்பூசத் திருநாளன்று முருகப்பெருமானின் அருளும் அனுகிரகமும் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முருகப்பெருமானை மனப்பூர்வமாக வழிபட்டால், அனைவருடைய வாழ்க்கையிலும் நன்மைகள் நிச்சயம் உண்டாகும். தைப்பூசத் திருநாள் என்பது, பார்வதி தேவி தன்னுடைய சக்தியின் வடிவமாக வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு வழங்கிய நாள் என்றும், சூரனை வதம் செய்த புனித நாளாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. இத்தகைய சக்தி மிகுந்த நாளில் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகளை இப்போது பார்க்கலாம்.
1. மேஷ ராசி
இந்த தைப்பூசத் திருநாளில் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல யோகங்கள் ஏற்படுகின்றன. செவ்வாய் பகவான் முருகப்பெருமானின் ஆதிக்கத்தில் இருப்பதால், பணப் பிரச்சினைகள் நீங்கி, திடீர் அதிர்ஷ்டம், ராஜ யோகம், செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.
2. விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் இரண்டாவது ஆதிக்க ராசியான விருச்சிக ராசிக்காரர்களுக்கும், முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பணக்கஷ்டங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி, தொழில், வேலை, வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
3. கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தைப்பூசத் திருநாளில் செல்வச் செழிப்பு, சொந்த வீடு, வாகனம், வாழ்க்கை நிலைத்தன்மை போன்ற யோகங்கள் உண்டாகும். திருமணம் தாமதமாகி இருந்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!
4. மீன ராசி
குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற மீன ராசிக்காரர்களுக்கு, முருகப்பெருமானின் அருளால் கோடீஸ்வர யோகம், வாழ்க்கை உச்சத்தை அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தைப்பூசத் திருநாளன்று முருகன் கோவிலில் வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை தரும். இந்த தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை மனப்பூர்வமாக வழிபட்டால், உங்கள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் நிச்சயம் ஏற்படும்.