Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லட்சுமி அருளாசி கிடைக்கணுமா?.. காலையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

லட்சுமி தேவியின் அருளைப் பெற்று செல்வ செழிப்பை அதிகரிக்க, காலை எழுந்தவுடன் ஐந்து எளிய வழிபாடுகளைச் செய்யலாம். உள்ளங்கைத் தேய்த்து மந்திரம் சொல்லுதல், சூரிய பகவானை வழிபாடு செய்தல் ஆகியவை அடங்கும். இவற்றைச் செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி அருளாசி கிடைக்கணுமா?.. காலையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
லட்சுமி தேவி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jun 2025 10:04 AM

பலருக்கும் கடவுளின் மேல் தவிர்க்க முடியாத இறை நம்பிக்கை இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தெய்வம் நம்முடன் இருந்து தீமைகளை தடுத்து வெற்றிகளை கொடுக்க வேண்டும் என வேண்டாத நாள் இல்லை. இப்படியான நிலையில் காலையில் எழுந்தவுடன், லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெற ஐந்து எளிய விஷயங்களை செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றலை வருகை தந்து செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி செல்வ செழிப்பை தருவாள் என நம்பப்படுகிறது. மேலும் இவற்றை ஒவ்வொரு நாளும் செய்வதன்மூலம், லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வசிப்பதாகவும் ஐதீகம் உள்ளது.  அதேபோல் லட்சுமி தேவி பார்வை கிடைப்பவர்களுக்கு ஒருபோதும் நிதி சிக்கல் ஏற்படாது எனவும் நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 காலையில் செய்ய வேண்டியது என்ன?

  1. கைரேகை பார்ப்பது: தியானம் செய்யும் பலருக்கும் அதன் முடிவில் உள்ளங்கை பார்ப்பதன் அவசியம் தெரியும். அப்படியான நிலையில் தூங்கி காலையில் எழுந்ததும், முதலில் உங்கள் உள்ளங்கைகளைப் நன்றாக தேய்த்து பாருங்கள். அதனுடன், “கரக்ரே வாசதே லட்சுமி.. கரமாத்யே சரஸ்வதி..கரமுலே ஸ்திதோ பிரம்ம பிரபாதே கர்தர்ஷனம்.. என்ற மந்திரத்தை சொல்வதால் நம்முடைய உள்ளங்கைகளில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி மற்றும் பிரம்மா ஆகியோர் வசிப்பதாகவும் அவர்களின் ஆசி கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
  2. சூரிய பகவானை வணங்குதல்: நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை பார்த்தால் காலையில் குளித்த பிறகு கிழக்கு திசை நோக்கி சூரிய பகவானை வழிபடுவார்கள். இதனை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஒரு செம்புப் பாத்திரத்தின் தண்ணீரில் குங்குமம் கரைத்து, அதில் பூக்கள் வைத்து வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அப்போது, “ஓம் சூரிய பகவானே நமஹ, ஓம் சூரிய நமஹ, ஓம் ககாயாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
  3. துளசி பூஜை: காலையில் எழுந்து நீராடிய பிறகு வீட்டில் இருக்கும் துளசி செடியை வணங்க வேண்டும். மேலும் துளசி செடிக்கு கட்டாயம் ஒரு செம்பு தண்ணீர் ஊற்ற வேண்டும். துளசியில் லட்சுமி தேவி வசிப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் தினமும் துளசி செடியை வழிபடுவதன் மூலம், வீட்டில் லட்சுமி கடாட்சம் திகழும்.
  4. வாசலில் தண்ணீர் வைப்பது: காலையில் எழுந்து குளித்த பிறகு தான், வீட்டின் பிரதான நுழைவாயிலிலான வாசலுக்கு வர வேண்டும். அங்கு தண்ணீரை ஒரு செம்புப் பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிவப்பு பூக்களை போட்டு வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், காலையில் வீட்டின் வாசலில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பது புண்ணியத்தை தரும். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
  5. ஸ்வஸ்திக் சின்னம்: வீட்டின் பிரதான வாசலில் ஸ்வஸ்திகா வரைவது, ஒட்டி வைப்பதும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் பிரதான வாசலில் ஸ்வஸ்திகாவை வரைவதன் மூலம், உங்கள் வீடு எப்போதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் நிரப்பப்படும் என்று நம்பப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)