பங்குனி கார்த்திகை விரதம்.. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது..

Panguni Karthigai viratham: யோகத்தைப் பொறுத்தவரை திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை முதல் இரவு 11.52 மணி வரை மரண யோகம் நீடிப்பதால், புதிய முயற்சிகள் அல்லது சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. இரவு 11:52-க்குப் பிறகு அமிர்த யோகம் தொடங்குவதால், அதன் பின்னரே பயணங்கள் அல்லது சுப வேலைகளைத் திட்டமிடலாம்.

பங்குனி கார்த்திகை விரதம்.. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது..

கார்த்திகை விரதம்

Published: 

22 Mar 2026 21:39 PM

 IST

விசுவாசு தமிழ் ஆண்டு, பங்குனி மாதம் 9-ஆம் தேதி (23-03-2026), திங்கட்கிழமை அன்று ஆன்மீக ரீதியாக இரண்டு முக்கிய விசேஷங்கள் இணைந்து வருகின்றன. அன்றைய தினம் வசந்த நவராத்திரியின் ஐந்தாம் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்தை வீடுகளில் பாராயணம் செய்வது அல்லது ஒலிக்கச் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அதேபோல், இன்று முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரம் என்பதால், பக்தர்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்வது சிறப்பு.

இதையும் படிக்க: ஸ்ரீ ராம நவமி 2026: வழிபாடு, விரத முறைகள் மற்றும் பலன்கள்.. முழு விவரம்!!

கார்த்திகை விரதம்:

மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று பாலகண்டன் அல்லது வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது குடும்பத்தில் வளம் சேர்க்கும். அதிகாலையில் நீராடி, கந்த சஷ்டி கவசம் அல்லது முருகன் துதிகளைப் பாராயணம் செய்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். மாலையில் அருகிலுள்ள முருகர் கோவிலுக்குச் சென்று பாலகண்டன் அல்லது வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகப் பொருட்கள் (பால், பன்னீர், சந்தனம்) வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்வது சிறந்தது.

பஞ்சாங்க விவரங்கள்:

அன்றைய பஞ்சாங்க விபரங்களின்படி, சூரிய பகவான் காலை 6.20 மணிக்கு உதயமாவார். திதியைப் பொறுத்தவரை அன்று இரவு 9.54 மணி வரை பஞ்சமி திதி நிலவுகிறது, அதன் பின்னரே சஷ்டி திதி ஆரம்பமாகிறது. எனவே, பித்ருக்களுக்குச் சிராத்தம் செய்பவர்கள் பஞ்சமி திதி கணக்கிலேயே செய்ய வேண்டும்.

சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது:

நட்சத்திரத்தைப் பொறுத்தவரை இரவு 11.52 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது, அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம் தொடங்குகிறது. யோகத்தைப் பொறுத்தவரை திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை முதல் இரவு 11.52 மணி வரை மரண யோகம் நீடிப்பதால், புதிய முயற்சிகள் அல்லது சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. இரவு 11:52-க்குப் பிறகு அமிர்த யோகம் தொடங்குவதால், அதன் பின்னரே பயணங்கள் அல்லது சுப வேலைகளைத் திட்டமிடலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனம்:

இன்றைய தினத்தில் தவிர்க்க வேண்டிய நேரங்களாக ராகு காலம் காலை 07.50 முதல் 09.20 மணி வரையிலும், எமகண்டம் காலை 10.50 முதல் 12.20 மணி வரையிலும், குளிகை காலம் பிற்பகல் 01.50 முதல் 03.20 மணி வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திராஷ்டம நிலவரப்படி, அன்று சித்திரை (பாதம் 2, 3, 4) மற்றும் சுவாதி (பாதம் 1) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்..

சித்திரை நட்சத்திற்கு சந்திராஷ்டமம்:

குறிப்பாகச் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்குக் காலை 7.05 முதல் இரவு 11.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய முடிவுகள் மற்றும் வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். ஒட்டுமொத்தமாக, இன்று வழிபாட்டிற்கு உகந்த நாளாக இருந்தாலும், புதிய தொடக்கங்களுக்கு இரவு 11.52 மணி வரை பொறுத்திருப்பது நலம் பயக்கும்.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..