கார்த்திகை தீபம் : வீடுகளில் எப்படி விளக்கேற்றினால் முழு பலன் கிடைக்கும்?
Karthigai Deepam : கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை செல்ல இயலாத பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றுவதன் மூலம் முழு பலனை பெறலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்த ஆண்டு கார்த்திகை தீபம் (Karthigai Deepam) வருகிற டிசம்பர் 3, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் (Thiruvannamalai) கார்த்திகை தீபம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் சிவனை வழிபடுவது மிக சிறப்பான பலனை நமக்கு அளிக்கும் என நம்பப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவண்ணாமலை வர இயலாத பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு பலன் கிடைக்கிறது. இந்த கட்டுரையில் எப்படி விளக்கேற்ற வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
வீடுகளில் எப்படி விளக்கேற்ற வேண்டும்?
பொதுவாக வீடுகளில் விளக்கேற்றும்போது குறைந்தபட்சம் 27 விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். 27 விளக்குகளுக்கு மேல் கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் அதற்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் ஏற்றும் விளக்குகளில் ஒன்று மட்டும் நெய் தீபமாக இருக்குமாரு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த 27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும் என்பதால் அதன் பிறகே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்.
இதையும் படிக்க : கார்த்திகை மாதம்: முருகன் அருளைப்பெற இந்த 6 நாட்கள் மிக முக்கிய நாளாகும்!!
ஐந்து தீபம் ஏற்றும் முறை
வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றிய பிறகு கூடுதலாக 5 விளக்கும் ஏற்றுவதால் நான் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த 5 விளக்குகள் ஏற்றுவதற்கு நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். அவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. முதலில் 4 சிறிய அகல் விளக்குகள் மற்றும் ஒரு பேரிய அகல் விளக்கு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
இதையும் படிக்க : சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோவில் முன் தேங்காய் உருட்டுவது ஏன்?
ஆறு வெற்றிலைகளை எடுத்து அதில் இருக்கும் காம்புகளை நீக் வேண்டும். அதில் 5 வெற்றிலைகளை பூஜை அறையில் வைத்து அதன் மீது அகல் விளக்குகளை வைக்க வேண்டும். பெரிய அகல் விளக்கை நடுவிலும், மீதி உள்ள 4 அகல் விளக்குகளை அதனை சுற்றிலும் வருமாறு வைக்கவும். பின் ஆறாவது வெற்றிலையை விளக்குகளுக்கு முன் வைத்து அதில் நிறைய மஞ்சளை பிடித்து வைத்து அதில் குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் அதனருகே இருபுறமும் அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். இது27 விளக்குகளை ஏற்றிய பிறகு கூடுதலா செய்யும் நடைமுறை என்பதை மறக்க கூடாது. இப்படி செய்தால் நம் மனதில் நினைப்பது நடக்கும் என்பது நம்பிக்கை.