Ganesh Chaturthi: விநாயகருக்கு உகந்த 21 இலை, மலர் வழிபாடு!
Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டிற்கு 21 இலைகள் (இலந்தை, துளசி, மாவிலை, முதலானவை) மற்றும் 21 பூக்கள் (தும்பை, முல்லை, தாழம்பூ முதலானவை) மிகவும் உகந்தவை. இந்த இலைகள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வதால் பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

விநாயகர்
விநாயகப் பெருமான் இந்து மதத்தில் மிக முக்கியமான கடவுளாக அறியப்படுகிறார். கணபதி, பிள்ளையார், ஆனைமுகன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ளது. நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் விநாயகரை வணங்காமல் செய்வதில்லை அல்லது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதில்லை என்பது ஐதீகமாகவே உள்ளது. விநாயகர் ஞானம், அறிவு, தடைகளை நீக்குபவர் மற்றும் புதிய தொடக்கத்திற்கு அச்சாரமிடுபவர் என நம்பப்படுகிறார். விநாயகருக்கு 32 வடிவங்கள் உள்ளது. இது பற்றி புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெயர்களில் வடிவங்களில் விநாயகப் பெருமான் தமிழ்நாட்டில் கோயில்களில் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய விநாயக பெருமான் தோன்றிய தினம் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விநாயகருக்கு உகந்த இலை வழிபாடு
இந்நாளில் விநாயகர் பெருமானுக்கு பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திரும்பும் திசை எங்கும் அமைந்திருக்கும் விநாயகர் கோயில்களில் பல்வேறு வடிவங்களில் வண்ண சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி வரும் வாரத்தின் முடிவில் அருகிலுள்ள ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படும். இப்படிப்பட்ட விநாயகருக்கு இலை வழிபாடு என்பது மிகவும் விசேஷமாக உள்ளது.
Also Read: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் கரைக்க புதிய விதிமுறைகள்..
அதாவது விநாயகருக்கு 21 இலைகள் உகந்ததாக அறியப்படுகிறது. அதில் வழிபாடு செய்தால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அப்படியாக இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, கிளா இலை, வில்வம், அருகம்புல், ஊமத்தை, மாசி, பருஹதி மாதுளை, விஷ்ணு கிரந்தி, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரி சங்கை, வன்னி, தங்க அரளி, எருக்கு, நுணா, தேவதாரு, அரசு ஆகிய 21 இலைகள் தான் அவையாகும்.
21 மலர்கள்
அதே சமயம் விநாயகருக்கு மிகவும் உகந்த பூக்களாக இருக்கும் பூ மற்றும் தும்பை பூ ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிமையாக வளர்ப்பவை, விலையில்லாதவை, தானே வளரும் தன்மை கொண்டவை என்பதால் இது விநாயகருக்கானதாக அறியப்படுகிறது. இதைத்தவிர முல்லை, தாழம்பூ, புன்னை, மகிழம், அரளி, மந்தாரை, பாதிரி, சம்பங்கி, ஊமத்தை, மாம்பூ, கொன்றை, செவ்வரளி, குறுந்தை, வில்வம், செங்கழுநீர், பவளமல்லி, மாதுளம், ஜாதிமல்லி, கண்டங்கத்திரி ஆகிய 21 மலர்களும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தவையாக பார்க்கப்படுகிறது.
Also Read: Sankatahara Chaturthi: விநாயகருக்கு உகந்த சங்கஹடசதுர்த்தி.. என்ன தானம் செய்யலாம்?
இந்த 21 மலர்களை ஏதேனும் ஒன்றை வைத்து வழிபடலாம். 21 மலர்களை வைத்தும் வழிபடலாம். அப்போது விநாயகருக்குரிய தாரக மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். எதுவுமே தெரியாதவர்கள் கணபதி போற்றி என கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபட்டால் வாழ்க்கையில் நாம் வெற்றியை மட்டும் ருசிக்கும் அளவுக்கு தடைகள் அனைத்தும் விலகும் என நம்பப்படுகிறது.