உங்கள் காரில் விநாயகர் சிலை வைத்துள்ளீர்களா?.. அப்போ கண்டிப்பா இதை செய்யுங்கள்!!

விநாயகர், கல்வி, செல்வம், நல்ல தொடக்கம், தடைகளை நீக்கும் தேவன்” என்பதால், காரில் வைப்பது மனநிறைவு மற்றும் நம்பிக்கை அளிக்கிறது. எனினும், நடைமுறை ரீதியாக காரில் கடவுள் சிலை வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன அதனை அறியலாம்.

உங்கள் காரில் விநாயகர் சிலை வைத்துள்ளீர்களா?.. அப்போ கண்டிப்பா இதை செய்யுங்கள்!!

காரில் விநாயகர் சிலை

Updated On: 

24 Nov 2025 15:40 PM

 IST

பலர் காரில் விநாயகர் சிலையை வைத்து பயணம் செய்வது வழக்கம். பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும், நிம்மதி, மனஅமைதியைத் தரும் என்ற நம்பிக்கையாலும் பெரும்பாலோர் விநாயகர் சிலையை காரில் வைத்துக் கொள்கின்றர். ஆனால், காரில் தெய்வச் சிலையை வைப்பது என்பது வெறும் அலங்காரமாக மட்டுமல்லாமல்; அதை வீட்டில் உள்ள பூஜை அறையைப் போல மரியாதையுடனும் கவனத்துடனும் நடத்தும் பொறுப்பும் நமக்கு உண்டு என்கின்றனர் ஆன்மிகவாதிகள். இங்கே விநாயகர் சிலையை காரில் சரியாக வைப்பதற்கான எளிய வழிமுறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

சரியான சிலையைத் தேர்வு செய்வது:

கார்கள் வெப்பமடையும், மேடு பள்ளங்களில் குலுங்கும், அதனால், உருவத்தில் சிறிய வலுவான சிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரியதாகவோ மிகவும் மென்மையானதாகவோ இருக்கும் சிலைகள் காரில் வைக்க பொருத்தமாக இருக்காது. சிறியதும், உறுதியானதும், கல், மரம், உலோகம் போன்ற பொருட்களில் செய்யப்பட்ட சிலைகளைக் வாங்குவது நல்லது. மிகப் பெரிய சிலையை வைப்பது கார் ஓட்டுவதற்கு தடையாக இருக்கலாம். அதேசமயம், மிக மென்மையான சிலை எளிதில் உடைந்து போகும் அபாயம் உண்டு.

சரியான இடத்தில் வைப்பது:

சிலையை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அது ஓட்டுனரின் பார்வையை மறைக்கக்கூடாது. பொதுவாக டாஷ்போர்டின் நடுவில் வைப்பார்கள், ஆனால் அது கண்ணோட்டத்தை பாதித்தால் சிறிது தூரம் மாற்றி வைத்துக்கொள்ளலாம். முக்கியமாக, சிலையை நிலையாக இருக்கும் வகையில் வைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளில் கார் செல்லும் போது அல்லது பிரேக் போடும் போது, சிலை இடம் மாறாதபடி non-slip mat அல்லது வலுவான அடிப்பக்கம் இருப்பது அவசியமாகும்.

சுத்தமாகவும், நிலையாகவும் வைத்தல்:

காரில் தூசி விரைவாக ஏறும். வீட்டில் தெய்வத்தை வைத்திருக்கும் பகுதி எப்படிச் சுத்தம் செய்யப்படுகிறதோ, அதேபோல விநாயகர் சிலையை காரில் வைத்தால், கார் டாஷ்போர்டையும் முறையாகத் துடைக்க வேண்டும். தூசி படிந்த தெய்வச் சிலை மரியாதைக்குரியது அல்ல. அதோடு, வேகமாக பிரேக் அடித்தால் அல்லது வளைவில் கார் திடீரென சறுக்கினால் சிலை கவிழ்ந்து விழலாம். இது ஓட்டுனருக்கு தடையாகவும் ஆபத்தாகவும் மாறும். எனவே சிலை உறுதியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.

பூஜை, தீபம் காட்டுவதை தவிர்க்கவும்:

விநாயகர் சிலை இருப்பது என்பதற்காக வாசனைத் தூபம் வைப்பது, தீபம் ஏற்றுவது, சிறிய பூஜைகள் செய்வது உள்ளிட்டவற்றை வீட்டில் செய்வது சரி; ஆனால் காரில் அதனை செய்தால் மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். எளிதில் காரில் தீப்பற்றி விபத்து நேரிடலாம். அதனால் இது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஏர்பேக் அருகில் வைக்கக்கூடாது:

இது மிக முக்கியமான பாதுகாப்பு விதி. ஏர்பேக் திறக்கும்போது சிறிய சிலையும் மிகுந்த வேகத்தில் பாய்ந்து காயப்படுத்தும். எனவே, கார் ஸ்டிரிங், ஏர்பேக் பகுதி அல்லது முன் இருக்கையில், ஏர்பேக் மேல் எதையும் வைக்கக்கூடாது.

Also Read : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!

அதேபோல், காரில் ஒரு விநாயகர் சிலை போதுமானது. அதற்குப் பக்கத்தில் மாலைகள், பல சின்னச் சிலைகள், ஸ்டிக்கர்கள் வைத்து குழப்பமாக்க வேண்டாம். இவ்வாறு ஓட்டும்போது கவனச் சிதறலை ஏற்படுத்தும். மேலும், வெடித்து, சிதைந்து, முறிந்து போன கடவுள் சிலைகளை கார் போன்ற இடங்களில் வைப்பது பொதுவாக தவறானதாகும். அது உரிய மரியாதையுடன் அகற்றப்பட்டு, முறையாக நீக்கப்பட வேண்டும்.

மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. வெடிக்கும் அபாயம் அதிகம்!!
இனி ஹோட்டல், மால், அலுவலங்களிலும் ஆதார் கட்டாயம்.. புதிய விதிமுறைகள்!!
மலையாள பிக் பாஸ் சீசன் 7.. டிஆர்பி-யில் புதிய சாதனை..
TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?