Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு செல்வம், சொத்து அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள்ளது. குறிப்பாக மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் ராசிகள் சாதகமான காலத்தை அனுபவிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Astrology: அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 May 2025 13:45 PM

ஜோதிட சாஸ்திரத்தில் மனிதரின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் கிரகங்களின் பெயர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் சில ராசிக்காரர்களுக்கு வழக்கத்தை விட வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். அப்படியாக சில ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் உடைமைகளின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில் கூட கவனம் முழுக்க வருமானத்தை அதிகரிப்பதில் தான் இருக்கும். இப்படியான சூழலில் 2025 ஆம் ஆண்டு சனி, குரு, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் இலட்சியங்கள் ஆகியவை நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தை பொறுத்தமட்டில், குரு மற்றும் செவ்வாய் கிரகங்களால் சாதகமாக இருக்கும் ராசியினர் அதிக செல்வத்தை குவிப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு.

அப்படியான நிலையில் இந்த 6 கிரகங்கள் தற்போது சாதகமாக இருக்கும் மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் மகரம் ராசிகளுக்கு என்னன் நடக்கும் என பார்க்கலாம்.

  1. மேஷம்: இந்த ராசியின் அதிபதியான செவ்வாய் நான்காம் வீட்டிலும், ராகு சுபவீட்டிலும் சஞ்சரிக்கிறார்கள். இதனால் சொந்த வீடு வாங்கும் கனவு விரைவில் நனவாகும். சொத்து தகராறுகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். இதனால் நில ஆதாயங்கள் கிடைக்கும். அதேசமயம் சொந்த முயற்சியால் நிலம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. வங்கியின் பண இருப்பு கணிசமாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை  தரப்பிலிருந்து சொத்துக்கள் வரும். நினைத்தது நடந்தேறும்.
  2. ரிஷபம்: இந்த ராசிக்கு சனி, குரு மற்றும் செவ்வாய் மிகவும் சாதகமாக இருப்பதால், உங்கள் சொத்துக்களை அதிகரிப்பதற்கான வழி பிறகும்.  பல வழிகளில் செல்வம் பெருகும் வாய்ப்பு உள்ளது. பங்குகள், முதலீடுகள், பிற நிதி பரிவர்த்தனை முயற்சிகளில் அதிக லாபத்தை ஈட்டும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு காரணமாகவும் புதிய வீட்டுக்கு உரிமையாளராகும் வாய்ப்பு அமையும். தாய் வழியில் மதிப்புமிக்க சொத்துக்கள் கைக்கு வரும்.
  3. சிம்மம்: இந்த ராசிக்கு குரு மற்றும் செவ்வாய் மிகவும் சாதகமாக இருப்பார்கள். அதனால் செல்வம் குவியும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக நிறைவேறும்.  சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்படும்.  வீடு, வாகனம், நகை, உடை போன்றவை வாங்கும் எண்ணம் நினைத்த நேரத்தில் இருந்து உடனடியாக நிறைவேறும் அளவுக்கு அனைத்தும் சாதகமாக உள்ளது.
  4. துலாம்: இந்த ராசிக்கு சனி, குரு, செவ்வாய், ராசியின் அதிபதியான சுக்கிரன் ஆகியோர் சாதகமாக இருக்கிறார்கள். இதனால் சொத்துக்கள் குவிவது உறுதியாகும். பரம்பரை சொத்து மூலம் நில ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை தரப்பில் இருந்து சொத்து  கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வருட இறுதிக்குள், உங்கள் சொந்த முயற்சியால் உங்கள் சொந்த வீட்டை கட்டி முடிப்பீர்கள். வருமானம் பெருகும். சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும்.
  5. தனுசு: இந்த ராசி குரு, ராகு, செவ்வாய் ஆகியோருக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் அதிகப்படியான நன்மைகள் இருக்கும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் நீங்கள் அதிக லாபம் ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட்  செய்பவர்களுக்கு மிகவும் லாபகரமானதாக நேரம் அமையும். நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். சொத்து தகராறுகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். வீட்டில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவீர்கள். சிறிய முயற்சியுடன் நிதி முன்னேற்றம் அடைவீர்கள்.
  6. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி, ராகு மற்றும் செவ்வாய் இந்த ஆண்டு முழுவதும் மிகவும் சாதகமாக இருப்பதால் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். சொத்துக்கள் குவியும். ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடுகள் செய்வீர்கள். வீடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். சொத்து தகராறு தீர்க்கப்பட்டு மதிப்புமிக்க சொத்துக்கள் கைக்கு வரும். வீடு அல்லது மனை வாங்க நல்ல காலமாகும்.

(ஜோதிட அடிப்படையில் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

பாம்பை காண்பது நல்ல சகுனமா? - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பலன்கள்!
பாம்பை காண்பது நல்ல சகுனமா? - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பலன்கள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?...
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை...
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!...
38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை
38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை...
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’...
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்...
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !...
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு......