Astrology: வக்ர நிலைக்கு செல்லும் புதன்.. இந்த 4 ராசிக்கு வருமானம் கொட்டும்!
2025 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை புதன் வக்ரம் நிகழ்கிறது. இதனால் மேஷம், கடகம், விருச்சிகம், மீனம் ராசிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்கள், கடக ராசிக்காரர்களுக்கு திறமை வெளிப்பாடு போன்றவை இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவக்கிரகங்களின் பிடியில் தான் ஒருவரின் வாழ்க்கை அமையப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கிரகங்களின் திசை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். இந்த திசை மாற்றத்தால் அது ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்று ஜோதிடம் கூறுகிறது. அத்தகைய மாற்றம் பாசிட்டிவாகவும் இருக்கலாம், நெகட்டிவாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி, 2025ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி புதன் கிரகம் வக்கிர நிலைக்குச் செல்கிறது. இதன் காரணமாக நான்கு ராசிகளில் மாற்றம் நிகழப்போகிறது என சொல்லப்படுகிறது. புதன் வக்கிர நிலைக்குச் செல்வதால் இந்த நான்கு ராசிகளின் தலைவிதியும் மாறும் என்று கூறப்படுகிறது.
புதனின் இந்த இயக்கம் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அந்த 4 ராசிகள் என்னென்ன பலன்களை பெறுவார்கள் என்பது பற்றிக் காணலாம்.
மாற்றம் பெறும் அந்த 4 ராசிகள்
- மேஷம்: இந்த வரிசையில் மேஷ ராசி முதலிடத்தில் உள்ளது. புதன் கிரகம் வக்கிரமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைக் காண்பார்கள். மேலும், இந்த காலகட்டத்தில் பழைய பிரச்னைகள், வழக்குகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தீர்க்கப்படும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாக, நிதி நிலைமை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. வருமானம் ஈட்டும் முயற்சிகள் கைமேல் பலனைக் கொடுக்கும்.
- கடகம்: புதன் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் சில முடிவுகளை எடுப்பது ராசிக்காரர்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் பின்னாளில் எடுத்த இந்த முடிவு நல்ல பலனைத் தரும் என்பதை உணருவீர்கள். உங்கள் திறமையைக் காட்ட உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும். பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கும் புதன் வக்ர நிவர்த்தியால் மிகப்பெரிய நன்மை ஏற்படும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். திடீரென பெரிய அளவில் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எடுத்த வேலைகள் நிறைவடையும். மன நிம்மதி பெறுவீர்கள்.
- மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர நிவர்த்தியால் மிகப்பெரிய நன்மை ஏற்படப்போகிறது. காதல் உறவுகள் முன்பை விட சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்களுக்கு வலுவான வாய்ப்பு கிடைக்கும்ம். இசை, கலை போன்ற படைப்புத் துறைகளில் நீங்கள் இணைந்திருப்பதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். குழந்தை பேறு தொடர்பான செய்திகள் கிடைக்கும்.
(ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது என்பதால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)