AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கும்ப ராசியில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி!

2025 மே 20 ஆம் தேதி காலை 7:05 மணிக்கு சந்திரன் கும்ப ராசியில் ராகுவுடன் இணைந்துள்ளது. இந்த சேர்க்கை ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மையளிக்கும். வேலை, வியாபாரம், படிப்பு மற்றும் உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கும்ப ராசியில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 May 2025 18:40 PM IST

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் என்பது மிக முக்கியமான மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களில் ஒன்றாக சந்திரன் மனம் மற்றும் உணர்வுகளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதேசமயம் ராகு கிரகம் தான் இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கும் காரணம் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் 2025, மே 20 ஆம் தேதி காலை 7:05 மணிக்கு சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரித்துள்ளார். ஏற்கனவே அந்த ராசியில் இருந்த நிழல் கிரகமான ராகுவுடன் இதனால் ஒரு இணைப்பு ஏற்படுகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வரும் நாட்களில் மாற்றங்கள் வரும் என சொல்லப்படுகிறது. இதனால் எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பது பற்றிக் காணலாம்.

  1. ரிஷபம்: ராகு – சந்திரன் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் பத்தாவது வீட்டில் இந்த இணைப்பு ஏற்படுவது உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தரும். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டு முயற்சியால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகளுக்கு இது ஒரு நல்ல நேரமாகும். பங்குச் சந்தையிலோ அல்லது சொத்திலோ லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்கள் தொழில் தொடர்பான முடிவுகளை எடுக்க இது ஒரு சிறந்த நேரமாகும். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.  உறவுகள் வலுவடையும்.
  2. மிதுனம்: ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த இணைப்பு ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் நடைபெறுகிறது. இதனால் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. எதிலும் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தாலும் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க இது ஒரு நல்ல நேரமாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மதம் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகு புதிய உறவுகள் கிடைக்கும்.
  3. கன்னி: கன்னி ராசியின் அதிபதி புதனாகும். இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் ஜாதகத்தில் இந்த இணைப்பு ஆறாவது வீட்டில் நடக்கிறது. இதன்மூலம் தொழில் வாழ்க்கையில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்பு கிடைக்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். முதலீடுகளிலிருந்து நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சினைகள் நீங்கும்.
  4. துலாம்: இந்த இணைப்பானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது. இந்த ராசிக்கு ஐந்தாவது வீட்டில் இணையும் சந்திரன் மற்றும் ராகு  படைப்பு வேலைகளில் வெற்றியை தரும். எழுத்து, ஓவியம் அல்லது இசையில் திறமை பிரகாசிக்கும். தொழில் வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. முதலீட்டிலிருந்து நல்ல வருமானம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
  5. கும்பம்: இந்த சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு லக்ன நட்சத்திரத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். முதலீடுகளுக்கு இது ஒரு நல்ல நேரமாகும். சொத்து அல்லது பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

(ஜோதிட சாஸ்திரப்படி இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us