திங்கட்கிழமை இரும்பு பொருட்கள் வாங்காதீங்க.. இல்லாவிட்டால் சிக்கல் தான்!

திங்கட்கிழமை இரும்பு வாங்குவது அசுபம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது சந்திரன் மற்றும் சனியின் பகைமையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. மன அழுத்தம், நிதி இழப்பு, உறவுகளில் பிரச்சினைகள், வேலைத் தடைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

திங்கட்கிழமை இரும்பு பொருட்கள் வாங்காதீங்க.. இல்லாவிட்டால் சிக்கல் தான்!

இரும்பு பொருட்கள்

Published: 

07 Jul 2025 10:19 AM

பொதுவாக வாழ்க்கையில் நவக்கிரங்களின் அனுக்கிரகம் இருந்தால் எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் அசால்ட்டாக சமாளிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதில் ஒரு கிரகமான சந்திரன் மனம், அமைதி, குளிர்ச்சிகளுக்கான காரணியாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இரும்பு உலோகம் சனியுடன் தொடர்புடையது. ஆனால் சந்திரனுக்கும் சனிக்கும் இடையே பகை இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனால் நாம் ஒவ்வொரு நாளும் செய்யப்போகும் விஷயங்கள் சரியான நேரத்தில் செய்கிறோமா என்பதை அறிய வேண்டும். அந்த வகையில் திங்கட்கிழமை இரும்பு அல்லது அதனால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கப் போகிறீர்கள் என்றால், அது சாஸ்திரப்படி நல்லதா அல்லது அசுபமானதா என்பதை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கிரகத்துடன் ஒவ்வொரு உலோகமும் தொடர்புடையதாக குறிப்பிடப்படுகிறது. அப்படியான நிலையில் திங்கட்கிழமை இரும்பு வாங்குவது பொதுவாக அசுபமானதாகக் கருதப்படுகிறது. காரணம் இந்நாள் சந்திரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். சனி பகவான் நீதி, கர்மா, ஒழுக்கம் ஆகியவற்றில் உறுதியாக இருப்பதால் சில நேரங்களில் தடைகள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே திங்கட்கிழமையான சந்திரன் கிரகத்தின் நாளில், சனி கிரகத்தின் உலோமான இரும்பு வாங்கும்போது, ​​அது சந்திரன் மற்றும் சனி கிரகத்தின் எதிர்மறை விளைவுகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இது வாழ்க்கையில் சில அசுப அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்

மன நல பாதிப்புகள்: திங்கட்கிழமை இரும்பு வாங்குவது மன அமைதியின்மை, மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை ஏற்படும்.

நிதி இழப்பு : இந்த நாளில் இரும்பு வாங்குவது பண இழப்புக்கு வழிவகுக்கும் அல்லது தேவையற்ற செலவுகளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது நிதி நிலைமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

உறவுகளில் வேறுபாடுகள்: சந்திரன் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளின் காரணியாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திங்கட்கிழமை இரும்பு வாங்குவது குடும்பம் அல்லது பிற தனிப்பட்ட உறவுகளில் பதற்றம், கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்.

வேலையில் தடைகள்: ஒரு விஷயத்தில் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு சனி பகவான் காரணமாக அமைகிறார். அந்த வகையில் இந்த நாளில் இரும்பு வாங்குவது உங்கள் வேலையில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் திட்டங்கள் தாமதமாகலாம் அல்லது நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போகலாம்.

உடல்நலப் பிரச்சினைகள்: இதனால் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது, குறிப்பாக எலும்புகள், மூட்டுகள் அல்லது நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

எதிர்மறை சக்தியின் வருகை: திங்கட்கிழமை இரும்பு வாங்குவது வீட்டிற்குள் எதிர்மறை சக்தியைக் கொண்டுவரும் என்றும், இது அமைதியின்மையை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது

எந்த நாளில் இரும்பு வாங்க வேண்டும்?

ஒருவேளை நீங்கள் இரும்பு வாங்க வேண்டும் என்றால், சனிக்கிழமை அதற்கு மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் இரும்பு வாங்குவது சனி பகவானை மகிழ்விக்கும் என கூறப்படுகிறது. இது நல்ல பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் சனி பகவானால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கலாம் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)