திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!! | TV9 Tamil News

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!

Updated On: 

15 Mar 2026 14:09 PM

 IST

Tamilnadu assembly election 2026: திமுக கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.

1 / 5தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவை காளப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்று சுட்டிகாட்டினார்.

தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவை காளப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்று சுட்டிகாட்டினார்.

2 / 5

தவெகவினர் நடத்திய கூட்டம் குறித்து நான் கருத்து கூற முடியாது. என்னை பொறுத்தவரை விஜய்யை பற்றி நான் இதுவரை பேசிய கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தவெக தொடர்பாக பாஜக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது.

3 / 5

திமுக கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு 3 தொகுதி கூடுதலாக உயர்த்திக் கொடுக்கிறபோது எங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்து கொண்டிருக்கிறார். வெறும் 4 தொகுதிகள் வாங்கி உள்ளார். எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார். வைகோவை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது.

4 / 5

திமுக கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். பொது எதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது.

5 / 5

போட்டியிட கூறவில்லை: என்னை இதுவரை தேர்தலில் போட்டியிட கூறவில்லை. இப்போது நான் களப்பணிகளை செய்து வருகிறேன். கட்சி சொல்வதை செய்வோம். கோவை, திருப்பூரில் போட்டியிட முயற்சிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us