Sivakasi Constituency Election 2026: குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி சட்டமன்ற தொகுதி.. பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையை யார் நிறைவேற்றுவார்?
சிவகாசி சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குக் கீழ் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சிவகாசி, திருத்தங்கல், ஆனையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இந்தத் தொகுதியில் அடங்குகின்றன. சிவகாசி “குட்டி ஜப்பான்” என அழைக்கப்படும் அளவிற்கு தொழில்துறையில் முன்னிலையில் இருக்கும் பகுதியாகும். பட்டாசு தொழில், தீப்பெட்டி உற்பத்தி, அச்சுத் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இந்தப் பகுதியிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
1 / 6

2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6
Follow Us